முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனைக் கைது செய்யுமாறு மாத்தறை நீதிவான் நீதிமன்றத்தால் பகிரங்கப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு இன்று செவ்வாய்க்கிழமை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தேசபந்து தென்னக்கோனுக்கு எதிராக வெளிநாட்டுப் பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு மாத்தறை, வெலிகம பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மாத்தறை நீதிவான் நீதிமன்றத்தால் கடந்த பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தேசபந்து தென்னக்கோனைக் கைது செய்ய பொலிஸார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.