கிளிநொச்சி மாவட்டத்தில் இளைஞர் சேவைகள் மன்றத்தினால் “கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.
இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சின் கீழ் செயற்பட்டுவரும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் “கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்திட்டம் இன்று நாடு முழுவதும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அந்த வகையில், கிளிநொச்சி மாவட்டத்தின் A9 வீதியில் நீதிமன்ற கட்டடம் தொடக்கம் கரடிபோக்கு சந்தி வரை வீதியில் அமைக்கப்பட்டுள்ள பூச்சாடிகளை மீள்புனருத்தானம் செய்வதற்கான பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டன.
குறித்த பணியில் இளைஞர், யுவதிகள் பங்கு கொண்டனர்.



