கொட்டாஞ்சேனை, பெனடிக்ட் மாவத்தை பகுதியில் துப்பாக்கிப் பிரயோக சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 43 வயதுடையவர் ஆவார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு T-56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் பிரயோகத்தை நடத்திய குழுவைக் கண்டுபிடிக்க நான்கு பொலிஸ் குழுக்கள் தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.