மாத்தறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உயன்வத்த பகுதியில் கால்வாயிலிருந்து ஆணொருவரின் சடலம் நேற்று வெள்ளிக்கிழமை (07) மீட்கப்பட்டுள்ளதாக மாத்தறை பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் மாத்தறை, தபேவெல பிரதேசத்தை சேர்ந்த 49 வயதுடைய நபர் ஆவார்.
இவர் துவிச்சக்கர வண்டியுடன் கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கால்வாயிலிருந்து துவிச்சக்கரவண்டி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சடலமானது மாத்தறை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.