வரலாற்று பிரசித்தி பெற்ற உகந்தை மலை ஸ்ரீ முருகன் ஆலய மலைக் குன்று ஒன்றில் புத்தர் சிலை மற்றும் பௌத்த கொடி என்பன வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சிலையும் கொடியும் தீர்த்தம் ஆடும் பகுதியில் உள்ள கடற்படை முகாமிற்கு அருகில் உள்ள மலை ஒன்றில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், தாம் குறித்த சூழலில் உள்ள மலை ஒன்றில் முருகன் சிலை ஒன்றினை வைக்க அனுமதி கேட்டபோது அனுமதி வழங்க மறுத்துள்ள நிலையில் அச் சூழலில் தற்போது புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது. இதற்கு அனுமதி உண்டா? என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அத்துடன் கதிர்காமத்தைப் போன்று உகந்தை மலையையும் வருங்காலத்தில் மாற்றத் திட்டம் இடம்பெற்றுள்ளதாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

