மன்னார் அடம்பன் பொலிஸ் பிரிவில் உள்ள கிராமம் ஒன்றில் 68 வயது வயோதிபர் ஒருவர் கடந்த ஏழு மாதத்திற்கு மேலாக பதின்நான்கு வயது சிறுமியுடன் தகாத உறவில் இருந்து சிறுமியை ஏழு மாதம் கர்ப்பம் ஆக்கிய சம்பவம் தெரியவந்துள்ளது.
கடந்த எழு மாத காலத்திற்கு மேலாக அதே கிராமத்தில் பூட்டப்பிள்ளை இருக்க கூடிய குறித்த வயேதிபர் சிறுமியுடன் தகாத உறவில் ஈடுபட்டு வந்துள்ளார். அதற்கான காரணம் அச்சிறுமி வேறு ஒரு இளைஞனுடன் தொலைபேசியில் கதைப்பதற்கு குறித்த வயேதிபரிடம் தொலைபேசி வேண்டி கதைப்பதாகவும் அதனை வைத்து மிரட்டியே தன்வசப்படுத்தியதாகவும் தெரியவந்துள்ளது.
இச்சிறுமியின் தாயார் அப்பிரதேசதில் உள்ள ஒருவருடன் உறவு வைத்திருந்தாகவும் அவரும் தன்னுடன் உறவு கொண்டதாகவும், இச்சிறுமியின் சகோதரியின் காதலன் ஒருவருடனும் தகாத உறவு வைத்தாகவும் தெரிவித்ததாக தகவல்கள் இருப்பதோடு இந்த வயோதிபர் எட்டுமாத காலமும் 32 தடவை உறவு வைத்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே இச்சிறுமி தாயிடம் தனக்கு மூன்று மாதம் மாதவிலக்கு வரவில்லை எனவும் தெரிவித்துள்ளார். தாய் அது பற்றி எந்த விதமான அக்கறையும் மேற்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
பாடசாலையில் வைத்து ஆசிரியைகள் சிறுமி கருவுற்றிருப்பதை அறிந்து அவரது தாயுடன் வைத்தியசாலைக்கு அனுப்பிய போது வைத்தியசாலையால் பொலிஸாருக்கு தெரிவித்த போது தாய் வைத்தியசாலையை விட்டு வெளியேறி குடும்பத்துடன் வேறு மாவட்டத்தில் தலைமறைவாகி இருந்து பின்னர் தாய், தந்தை வீட்டுத் தளபாடப் பொருட்களை ஏற்றிச் செல்ல வந்த போது தகவல் அறிந்த பொலிஸார் தாய் தந்தையை கைது செய்தனர். பின்னர் குறித்த சிறுமியை மீட்டு விசாரணை செய்து பின்னர் வயோதிபரை கைது செய்தனர்.
கடந்த 20.05.2025 அன்று நீதிமன்றத்தினால் வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வயோதிபர் எதிர்வரும் 28.05.2025 வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பான விசாரணைகளை அடம்பன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இவ் வயோதிபரின் மகன் ஒரு முன்னாள் போராளி. இவர் வறிய குடும்பங்கள், பெண்கள் தலைமைத்துவ குடும்பங்களுக்கு உதவி செய்து வருகின்றவர். இவரும் உதவி கேட்டு வரும் பெண்களை தன்னுடன் தகாத உறவுக்கு வந்தால் தான் உதவி செய்வதாகவும் தெரிவிப்பதாக அக்கிராமத்தில் பலர் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது. சிறுவர் பாதுகாப்பு திணைக்களம், பொலிஸார் இவ்வாறான விடயத்தில் தாய் தந்தையிடம் விசாரணைகளை மேற்கொண்டு அவர்களுக்கு தண்டணை வழக்குவதோடு இக் கிராம மட்டத்தில் விழிப்புணர்வு கலந்துரையாடல் செய்வது முக்கியமான விடயம் என்பது குறிப்பிடத்தக்கது.