• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, May 26, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் மறைவு தமிழர்களுக்குப் பேரிழப்பு; சஜித் இரங்கல்.!

Mathavi by Mathavi
January 30, 2025
in இலங்கை செய்திகள்.
0
மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் மறைவு தமிழர்களுக்குப் பேரிழப்பு; சஜித் இரங்கல்.!
Share on FacebookShare on Twitter

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் மறைவு தமிழர்களுக்குப் பேரிழப்பாகும் என்று இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மறைந்த மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா தனது ஐந்து தசாப்தகால அரசியல் வாழ்க்கையில், அறவழிப் போராட்டம், சிறைவாசம் எனத் தமிழ் மக்களுக்களின் உரிமைக்காகக் குரல் எழுப்பி வந்தார். அவரின் மறைவானது தமிழ் மக்களுக்குப் பேரிழப்பாகும்.

அன்னாரது மறைவுச் செய்தி பெரும் மன வேதனையையும் ஆழ்ந்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. அன்னாரின் மறைவானது தமிழரசுக் கட்சிக்கும், தமிழ் மக்களுக்கும் பேரிழப்பாகும்.

1942 ஒக்டோபர் மாதம் 27 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பிறந்த மாவை சேனாதிராஜா, அரசியல் மற்றும் பொதுச் சேவை ஆகியவற்றில் தனது வாழக்கையை அர்ப்பணித்திருந்தார். அவர் ஒரு சிறந்த அரசியல்வாதியும், திறமையான பேச்சாளரும், தைரியமான மனித உரிமைகள் செயற்பாட்டாளருமாவார்.

மாவை சேனாதிராஜா தனது 19 ஆவது வயதில் அரசியல் பயணத்தைத் தொடங்கி தனது 83 ஆவது வயது வரை தமிழ் மக்களுக்காகத் தனது வாழ்வை அர்ப்பணித்தார்.

போருக்கு முன்னரும் பின்னரும் அவரது அரசியல் செயற்பாடுகள் பல்வேறு பரிணாமங்களைக் கொண்டுள்ளன. அவர் தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை கண்டித்து போராடி சிறைவாசமும் அனுபவித்தவர்.

தனது அரசியல் வாழ்க்கையில், அநீதிக்கு எதிராகவும், நீதிக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் துணிந்து குரல் கொடுத்த மாவை சேனாதிராஜா, இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவராக கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2024 ஆண்டு வரை ஏறக்குறைய 10, வருடங்கள் தலைவராக செயற்பட்டு, ஆட்சியாளர்களின் அடக்குமுறைக்கு எதிராகக் கடுமையாகப் போராடினார்.

அரசியலின் மீதான அவரது ஆர்வம் அவரை தமிழ் அரசியலில் மிகவும் வெற்றிகரமான மற்றும் மரியாதைக்குரிய தலைவர்களில் ஒருவராக திகழச் செய்தது. தமிழ் அரசியலில் மாத்திரமின்றி தேசிய அரசியலிலும் அசாத்தியமான திறமையும், துணிச்சலும், தொலைநோக்குப் பார்வையும் கொண்டவராகத் திகழ்ந்தார்.

பயங்கரவாத அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டு அழிந்து கொண்டிருந்த ஒரு தேசத்தில், அச்சமற்ற மற்றும் அர்ப்பணிப்புள்ள தலைவராக உருவெடுத்தார். எப்போதும் தமிழ் மக்களை ஒன்றிணைக்கவும் பொதுவான நிலையைக் கண்டறியவும் முயற்சித்தார். தமிழர் அரசியல் பரப்பில் மாவை ஒரு யதார்த்தவாதியாக திகழ்ந்தார். பொதுவான இலங்கை அடையாளத்தில் வேற்றுமையில் ஒற்றுமையை காணும் பயணத்தை நம்பினார்.

சுதந்திரம் கிடைத்து 77 ஆவது ஆண்டு நிறைவுறும் தருணத்தில், தனித்துவங்களை பாதுகாத்துக் கொண்டு பிரச்சினையாக இருந்து வரும் அனைவரையும் உள்ளடக்கிய இலங்கை தேசத்தைக் கட்டியெழுப்பும் விடயத்தில் புதிய உபாயங்கள் மூலம் வெளிப்படையான பிரவேசத்துக்கான நடவடிக்கைகளை எடுப்பதே மாவை சேனாதிராஜாவுக்கு நாமளிக்கும் சிறந்த கௌரவமாகும்.

அன்னாரின் பிரிவால் துயர் உற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையிலும், ஐக்கிய மக்கள் சக்தி கட்சி சார்பாகவும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.” – என்றுள்ளது.

Related Posts

போலி இலக்கத் தகடுகளைப் பயன்படுத்தி வாகனம் செலுத்துவோருக்கு எச்சரிக்கை!

by selvan
May 25, 2026
0

சிதைக்கப்பட்ட அல்லது தரப்படுத்தப்படாத போலி இலக்கத் தகடுகளைப் பயன்படுத்தி வாகனங்களைச் செலுத்த வேண்டாம் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே....

அச்சிடப்பட்ட காப்புறுதி அட்டைகள் இனி வழங்கப்பட மாட்டாது!

அச்சிடப்பட்ட காப்புறுதி அட்டைகள் இனி வழங்கப்பட மாட்டாது!

by selvan
May 25, 2026
0

வாகனங்களுக்கான அச்சிடப்பட்ட காப்புறுதி அட்டைகள் இனி வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றுக்குப் பதிலாக, இனிமேல் QR குறியீடு மற்றும் கைபேசி மூலம் பெறக்கூடிய டிஜிட்டல் காப்புறுதி...

இந்திய அரசால் இலங்கை பொலிசாருக்கு 134 கெப் ரக வாகனங்கள் அன்பளிப்பு

by selvan
May 25, 2026
0

இந்திய அரசாங்கத்தினால் இலங்கை பொலிஸாரின் பயன்பாட்டிற்காக, அன்பளிப்பாக வழங்கப்பட்ட 134 கெப் ரக வாகனங்கள் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் இன்று  கையளிக்கப்பட்டன.இன்று (25) முற்பகல்...

கொழும்பில் டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம்

கொழும்பில் டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம்

by selvan
May 25, 2026
0

‘டிட்வா’ (Ditwah) சூறாவளியால் பாதிக்கப்பட்ட கொழும்பு மாவட்ட மீனவ சமூகத்திற்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 1,265,270 ரூபா பெறுமதியான மீன்பிடி வலைகள் வழங்கும் நிகழ்வு கடற்றொழில், நீரியல்...

தற்கொ*லை செய்துகொண்ட வித்தியா வழக்கின் குற்றவாளியினது சடலத்தை பொறுப்பேற்க அவரது மனைவி மறுப்பு!

தற்கொ*லை செய்துகொண்ட வித்தியா வழக்கின் குற்றவாளியினது சடலத்தை பொறுப்பேற்க அவரது மனைவி மறுப்பு!

by selvan
May 25, 2026
0

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொ*லை வழக்குடன் தொடர்புடைய குற்றவாளியின் இறுதி சடங்கை அரச செலவில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.புங்குடுதீவு பகுதியை சேர்ந்த பூபாலசிங்கம் ஜெயக்குமார் (வயது 46)...

வடக்கில் வெசாக் பண்டிகை குறித்து தவறான செய்தி பகிரப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு!

வடக்கில் வெசாக் பண்டிகை குறித்து தவறான செய்தி பகிரப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு!

by selvan
May 25, 2026
0

வெசாக் பண்டிகை குறித்து தவறான செய்தி பகிரப்பட்டு வருவதாக வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த...

பொய் வழக்கிற்கான வாக்குமூலம் என்னிடம் பெறப்பட்டது!

பொய் வழக்கிற்கான வாக்குமூலம் என்னிடம் பெறப்பட்டது!

by selvan
May 25, 2026
0

பொலிசார் தாக்கல் செய்த பொய் வழக்கிற்கான வாக்குமூலம் நேற்றையதினம் பதிவு செய்யப்பட்டதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம்...

உடலில் காயங்களுடன் முதியவர் ஒருவரின் சடலம்  மீட்பு!

by selvan
May 25, 2026
0

மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாவக்கொடிச்சேனை சிவன்கோவில் பாறைப் பகுதியில், உடலில் காயங்களுடன் முதியவர் ஒருவரின் சடலம்  மீட்க்கப்பட்டுள்ளது.இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருவதாவது:-உன்னிச்சை, நெடியமடுப் பகுதியைச் சேர்ந்த...

மன்னாரில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கை!

மன்னாரில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கை!

by selvan
May 25, 2026
0

மன்னார் மாவட்டத்தில் படையினர் வசமுள்ள மக்களின் காணிகளை விடுவிப்பதற்கான துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்டச் செயலகத்தில் பாதுகாப்புப் பிரதி...

விமல் வீரவன்ச பிணையில் விடுதலை!

விமல் வீரவன்ச பிணையில் விடுதலை!

by selvan
May 25, 2026
0

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச, இன்று கைது செய்யப்பட்ட நிலையில் கடுவல நீதவான் நீதிமன்றம் அவரை பிணையில் விடுவித்துள்ளது. பத்தரமுல்லையில் தேசிய...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி