மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் பொலிசாரினால் நேற்று செவ்வாய்கிழமை (28) மாலை முற்றுகையிடப்பட்டதில் 23 பரல்களில் 14 லட்சத்து 50 ஆயிரம் மில்லி லீற்றர் கோடா 5,25,000 லீற்றர் கசிப்பு, தோணி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு கொட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உட்பட்ட மண்முனை பிரதேச வாவியை அண்டிய அடர்ந்த காட்டுப் பகுதியில் நீண்ட நாட்களாக இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணை பிரிவினர் சுற்றிவளைத்தனர். இச்சுற்றி வளைப்பின் போது 23 பரள்களில் சுமார் 14 லட்சத்து 50 ஆயிரம் மில்லி லீற்றர் கோடா மற்றும் 750 போத்தல்களில் 5,25,000 மில்லி லீற்றர் கசிப்பு என்பன கைப்பற்றப்பட்டதுடன் சந்தேக நபர் பயணித்த தோணியும் பொலிசாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போது கசிப்பு உற்பத்திக்காக பயன்படுத்தப்பட்ட பெருமளவிலான உபகரணங்கள், பரள்கள், போத்தல்கள், பலன்கள் என்பனவும் பொலிசாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பி தெலங்கா வலகே தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்படி சுற்றி வளைப்பை மேற்கொண்டிருந்தனர்.
சுற்றி வளைப்பின் போது, சந்தேக நபர்கள் தப்பியோடிள்ளனர். கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் கொக்கட்டிச்சோலை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.