நேற்றையதினம் (12) தொண்டைமானாறு பகுதியைச் சேர்ந்த 50 பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு பொங்கல் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் இவ்வாறு பொங்கல் பொதிகள் வழங்கப்பட்டன.
இதில் யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதுவர் திரு.சாய்முரளி, பருத்தித்துறை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலர் திரு.சத்தியசீலன், கிராம சேவகர் திரு.பைகுந்தன் மற்றும் பயனாளிகள் கலந்துகொண்டனர்.