கிளிநொச்சி A9வீதி கரடிப்போக்கு சந்தியில் வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பட்டாரக வாகனத்தை அதிவேகமாக வந்த டிப்பர் வாகனம் மோதிய சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றது.
இச் சம்பவத்தில் வர்த்தக நிலையங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.