மூலம் உறுதியான அரசியல் தீர்வை சமஸ்டி அடிப்படையில் முன்வைத்து செயல் வடிவத்துடன் களத்தில் இறங்குங்கள்.மஹிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஐபக்ச போன்றோருக்கு கிடைத்த சந்தர்ப்பங்களை தவற விட்டமையே அவர்களின் நிரந்தர தோல்விக்கு வழி சமைத்தது.இதனை ஒரு வரலாற்றுப் பாடமாக கவனத்தில் கொண்டு இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல பொருளாதார மாற்றங்களுடன் இன ஐக்கியமும் சகோதரத்துவமும் வளம் பெற புதிய அரசியல் கலாசாரத்தை கட்டி வளர்க்க அதிகாரப்பகிர்வுடன் கூடிய சமஸ்டி அரசியலமைப்பை விரைவாக செயல் வடிவத்திற்கு கொண்டுவாருங்கள் அதன் மூலமே இனவாதம் மற்றும் பிரிவினைவாதத்தை சட்டரீதியாக வேருடன் பிடுங்கி எறிவதுடன் நாட்டை பூகோள நாடுகளின் அரசியல் தலையீடுகள் இன்றி பொருளாதார மாற்றங்களுடன் வளம்படுத்த முடியும் எனவும் சபா.குகதாஸ் தெரிவித்தார்