ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சங்கு சின்னத்தில் போட்டியிடும் சி.வேந்தனை ஆதரித்து வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் இன்று 01.11.2024 பிரச்சார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதுடன் மக்களுடைய தேவைப்பாடுகளும் கேட்டறியப்பட்டு பாராளுமன்றத்திற்கான புதிய முகங்களின் தேவைப்பாடு பற்றியும் தெளிவுபடுத்தப்பட்டது.
தேர்தல் பிரச்சார நடவடிக்கையின் போது சம்பவ இடத்திற்கு வருகை தந்த மருதங்கேணி பொலிஸார் துண்டுப் பிரசுரங்களை சரிபார்த்ததுடன் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளையும் தீவிரமாக கண்காணித்தமை குறிப்பிடத்தக்கது.