விஜய தசமி தினமான இன்று மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் விஜய தசமி விழாவானது, பொறுப்பதிகாரி எஸ்.ஏ எஸ்.புஸ்பகுமார அவர்களின் தலைமையில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.
பல வருடங்களுக்கு பின் இந்த நிகழ்வு வெகு சிறப்பாக இன்று மாலை 5.00 மணிக்கு மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் சைவ சமய முறைப்படி சைவக் குருக்கள் நடத்தி வைத்தார்.
நிகழ்வில் காவல் நிலையத்தில் உள்ள அனைத்து மத காவல் துறை உத்தியோகத்தர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முதன் முறையாக சரஸ்வதி பூஜை இடம் பெற்றது இதுவே முதல் தடவையாகும்.