அஞ்சல் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்பட்ட அல்லது நியமிக்கப்படக்கூடிய அனைத்து அரச அதிகாரிகள் மற்றும் சேவையாளர்கள் அஞ்சல் மூலம் வாக்களிபத்தற்காக விண்ணப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்துடன் சில குறைபாடுகள் காரணமாக அஞ்சல் வாக்குகளுக்கு விண்ணப்பிக்காத அல்லது விண்ணப்பங்களை நிராகரிப்பது என்பன தேர்தல் கடமைகளில் இருந்து விடுவிக்க ஒரு காரணம் அல்ல என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தலுடன் தொடர்புடைய நேரடியான பணிகளுக்கு நியமிக்கப்பட்டவர்கள் அஞ்சல் மூலம் வாக்குகளை செலுத்த கோருவதற்கு தகுதியற்றவர்கள் என்றும், அத்தகைய விண்ணப்பங்களை உறுதிப்படுத்த வேண்டாம் என்றும் தேர்தல் ஆணைக்குழுவானது நிறுவன பிரதானிகளை அறிவுறுத்தி உள்ளது.
இந்த ஆலோசனைகளுக்கு அமைய செயற்பட தவறினால் அரசியல் அமைப்பின்படி அபராதம் அல்லது மூன்று வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்து உள்ளது.