மத்திய மலை நாட்டில் கடந்த சில நாட்களாக கடுமையான வெப்பம் நிலவிவருகிறது.
இம் முறை இப் பகுதியில் உள்ள காசல்ரீ, மவுசாகல மற்றும் கென்யோன் ஆகிய நீர் தேக்கங்களின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை எட்டாத காரணத்தினால் தற்போது நீர்மட்டமானது வெகுவாக குறைந்துள்ளது.
மவுசாகலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட 22 அடி குறைந்த நிலையில் உள்ளது. அதே போல் கென்யோன் நீர் தேக்கங்கத்தில் 28 அடி மட்டுமே நீர் உள்ளது. காசல்ரீ நீர் தேக்கங்களின் நீர் மட்டமும் குறைந்த நிலையில் உள்ளது.
இதன் காரணமாக ஒரு சில விஷமிகள் நீர்த்தேக்கப் பகுதிகளில் உள்ள பற்றைகளுக்கு தீ வைப்பதில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த வாரம் காசல்ரீ நீர்த்தேக்கப் பகுதியில் உள்ள பற்றைக்கு தீ வைத்ததில் இரண்டு ஏக்கர் பரப்பளவானது எரிந்து சாம்பலாகிவிட்டது. இதனால் வன ஜீவராசிகள் மற்றும் பறைவைகள் அழிந்து போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.