திருகோணமலையில் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு சுவிட்சர்லாந்து பேர்ன் மாவட்டம் மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர்பீடம் கல்வி, சமூகநலம், பண்பாடு அறப்பணி மையத்தினால் சனிக்கிழமை (05.10.2024) வாழ்வாதார உதவியானது வழங்கப்பட்டது.
இந்நிகழ்வானது, திருகோணமலை மாவட்ட பொறுப்பாளர் ஆசிரியர் சக்தி சரவணபவ ஆனந்தம் திருச்செந்தூரன் தலைமையில் அன்புவழிபுரம் பிரதேசத்தில் இடம்பெற்றது.
கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்ற மாற்றுத்திறனாளி ஒருவரின் நீண்டகால குறைபாட்டை தீர்த்து வைக்கும் முகமாக வாழ்வாதார உதவியாக கோழிக்கூடு வழங்கி வைக்கப்பட்டது.
இதற்கான, ஏற்பாட்டை அறப்பணி மையத்தின் நிறுவனர் சக்தி சுவிஸ் சுரேஷ் சகோதரர் அவர்கள் முன்னெடுத்திருந்ததுடன், சுவிட்சர்லாந்தை சேர்ந்த தனேஸ்வரன் அபிஷேக் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவர்களின் குடும்பத்தின் நிதிப்பங்களிப்பில் இவ் வாழ்வாதார உதவி வழங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் அறப்பணி மையத்தின் போசகர்கள், சிரேஷ்ட ஊடகவியலாளர்களான அ.அச்சுதன், இரா.இராகுலன், அறப்பணியாளர்கள், மாணவர்கள், பிரதேச மக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.