Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: கிளிநொச்சி செய்திகள்
கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் அவர்களுக்கு மணிவிழா இன்று கொண்டாடப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் அரச சேவையிலிருந்து இன்று செவ்வாய்க்கிழமை (13) ஓய்வு பெறுகின்றார். இந்நிலையில் அவருக்கான பிரியாவிடை நிகழ்வு நேற்று(12) திங்கட்கிழமை மதியம் 1.00 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. குறித்த மணிவிழா நிகழ்வு இன்று காலை 9 மணியளவில் கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெற்றது. மணிவிழா நாயகி […]
இலங்கை விமானப்படையின் 73 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு வடமாகாணத்தில் உள்ள உதைபந்தாட்ட சங்கங்களிற்கிடையிலான உதைபந்தாட்பட்ட சுற்றுப்போட்டி இன்று வைபவ ரீதியாக ஆரம்பமானது. இலங்கை விமானப்படையின் 73 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இலங்கை விமாப்படைத் தளபதி எயா மார்சல் உதயநி ராஜபக்சவின் ஆலோசனைக்கு அமைவாக “கொமான்டோஸ் கப்” வெற்றிக்கிண்ண நட்புறவு போட்டியின் ஆரம்ப நிகழ்வு இன்று இடம்பெற்றது. 11 அணிகள் மோதிக்கொள்ளும் குறித்த போட்டி எதிர்வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் நிறைவடையவுள்ளது. குறித்த ஆரம்ப […]
இலங்கைக்கான ஜேர்மன் தூதரகரகத்தின் அழைப்பின் பேரில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், ஜேர்மன் தூதுவர் பெலிக்ஸ் நியூமனை, அண்மையில் கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகத் தெரிவுசெய்யப்பட்ட சிறீதரன் எம்.பிக்கு வாழ்த்துத் தெரிவுக்கும் நோக்கில் ஜேர்மன் தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இச்சந்திப்பில், ஈழ அரசியல் பரப்பை முன்னிறுத்திய அவரது அடுத்தகட்ட செயல்நோக்குகள் குறித்து தாம் கரிசனையோடிருப்பதாக தூதுவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கான ஜேர்மன் தூதரகரகத்தின் அழைப்பின் பேரில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், ஜேர்மன் தூதுவர் பெலிக்ஸ் நியூமன் அவர்களை, அண்மையில் கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகத் தெரிவுசெய்யப்பட்ட சிறீதரன் எம்.பிக்கு வாழ்த்துத் தெரிவுக்கும் நோக்கில் ஜேர்மன் தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இச்சந்திப்பில், ஈழ அரசியல் பரப்பை முன்னிறுத்திய அவரது அடுத்தகட்ட செயல்நோக்குகள் குறித்து தாம் கரிசனையோடிருப்பதாக தூதுவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வரலாற்றுச் சிறப்பு மிகு கிளிநொச்சி கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய வருடாந்த பங்குனி உத்தர பொங்கல் நிகழ்வு எதிர்வரும் பங்குனி மாதம் 24ம் திகதி நடைபெறவுள்ள நிலையில், குறித்த பொங்கல் உற்சவத்தின் போது மேற்கொள்ள வேண்டிய போக்குவரத்து, பாதுகாப்பு மற்றும் சுகாதாரவசதிகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக ஆராயும் முன்னாயத்தக் கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் தலைமையில் இன்றைய தினம் (9) ஆலய முன்றலில் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலில் கண்டாவளை பிரதேச செயலாளர், உதவி மாவட்ட […]
கிளிநொச்சி மாவட்ட விவசாய குழு கூட்டம் இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட விவசாய பணிப்பாளர், கமநல சேவை திணைக்களத்தினர், நீர்ப்பாசனத் திணைக்களத்தினர், விவசாய அமைப்புக்கள் உள்ளிட்டவற்றின் அதிகாரிகள், பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர். கலந்துரையாடலில் 2024 ஆம் ஆண்டுக்கான சிறு போக செய்கையில் 100% வெற்றியாக முன்னெடுக்க வேண்டும். தற்பொழுது குளங்களின் நீர்மட்டம் அடைவு மட்டத்தில் காணப்படுவதன் காரணமாக உரிய காலத்தில் சிறுபோக செய்கை […]
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோணாவில் பகுதியில் இன்றைய தினம் 07.02.2024மின் ஒழுக்கு ஏற்பட்டதன் காரணமாக 35 லட்சத்துக்கு மேற்பட்ட தும்பு மற்றும் மின் உபகரணங்கள் அனைத்தும் முற்று முழுதாக எரிந்து நாசமாகி உள்ளதாகவும் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் தீயணைப்பு பிரிவினர், தீயணைப்பு வாகனம் பழுதடைந்த நிலையில் இருந்தமையால் தண்ணீர்பெளசர் மூலம் அயலவர்களின் உதவியோடு உடனடியாக தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இருப்பினும் தமது வாழ்வாதாரத்தை இழந்த நிலையில் நிர்க்கதியாக நிற்பதாகவ தொழிற்சாலை உரிமையாளர் தெரிவித்துள்ளார். மின் இணைப்பு […]
மின்னொழுக்கு காரணமாக தும்புத் தொழிற்சாலை எரிந்து நாசமாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோணாவில் பகுதியில் உள்ள தும்பு உற்பத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட மின்னொழுக்கினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் 35 லட்சத்துக்கு மேற்பட்ட பெறுமதியான நட்டம் ஏற்பட்டுள்ளதுடன் தீ பரவியமையால் தும்பு மற்றும் மின் உபகரணங்கள் அனைத்தும் எரிந்துள்ளது. கரைச்சி பிரதேச சபையின் தீயணைப்பு வாகனம் பளுதடைந்த நிலையில் இருந்தமையால் தண்ணீர் பவுசர் மற்றும் அயலவர்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் […]
கிளிநொச்சி, தருமபுரம் பொலீஸ் பிரிவுக்கு உட்பட்ட புளியம்பொக்கணை கோரைமூட்டை பகுதியில் சட்டவிரோதமான கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர், தருமபுர பொலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக நேற்றைய தினம் 05.02.2024கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிந்து 2468 போத்தல் கோடாவும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களும் போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் இன்றைய தினம் 06.02.2024 கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட பொழுது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் என தருமபுரம் பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்றையதினம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சிறிலங்காவின் சுதந்திரநாளை கறுப்பு நாளாகப் பிரகடனப்படுத்தி வடக்கு கிழக்கு…