28.2 C
Jaffna
September 8, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்கிளிநொச்சி செய்திகள்

புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தில் பங்குனி உத்தர முன்னாயத்தக் கூட்டம்.!

வரலாற்றுச் சிறப்பு மிகு கிளிநொச்சி கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய வருடாந்த பங்குனி உத்தர பொங்கல் நிகழ்வு எதிர்வரும் பங்குனி மாதம் 24ம் திகதி நடைபெறவுள்ள நிலையில், குறித்த பொங்கல் உற்சவத்தின் போது மேற்கொள்ள வேண்டிய போக்குவரத்து, பாதுகாப்பு மற்றும் சுகாதாரவசதிகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக ஆராயும் முன்னாயத்தக் கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் தலைமையில் இன்றைய தினம் (9) ஆலய முன்றலில் நடைபெற்றது.
IMG 20240209 112658
குறித்த கலந்துரையாடலில் கண்டாவளை பிரதேச செயலாளர்,  உதவி மாவட்ட செயலாளர் ,பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், மாவட்ட இலங்கை போக்குவரத்து மற்றும் தனியார் போக்குவரத்து சபையினர், மின்சார சபை உத்தியோகத்தர்கள் ,பொதுசுகாதார பரிசோதகர்கள், பொங்கலுடன் தொடர்புடைய திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள் ,ஆலய நிர்வாகத்தினர் என பலரும் கலந்து கொண்டனர்.

இம்முறையும் பாரம்பரிய முறைப்படி பண்டம் எடுக்கும் வைபவம் புத்தூர் சந்தி மீசாலையிலிருந்து முன்னெடுக்கப்படவுள்ளது. எதிர்வரும் பங்குனி மாதம் 17ம் திகதி விளக்கு வைப்புடன் ஆரம்பமாகி அன்று பிற்பகல் பண்ட வண்டில்கள் புத்தூர் சந்தி நோக்கி சென்று பொங்கல் அன்று 24.02.2024 பண்ட வண்டில்கள் ஆலயத்தை வந்தடையும் வகையில் பாரம்பரியமாக  பொங்கல் நிகழ்வு நடைபெறும்.

Related posts

சற்று முன் ஜனாதிபதியின் ஊடக பிரிவு விசேட அறிவிப்பு..!

sumi

கிளிநொச்சியில் தமிழ் மக்கள் பொதுச்சபையின் மக்கள் சந்திப்பு!

User1

கல்கிசை கடலில் அடித்துச் செல்லப்பட்ட மூன்று சிறுவர்கள் மீட்பு!

User1