Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: உலக செய்திகள்
பாகிஸ்தானில் கூட்டணி ஆட்சி அமைக்க நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியும், பாகிஸ்தான் மக்கள் கட்சியும் ஒப்புக் கொண்டுள்ளன. பாகிஸ்தானில் கடந்த 8-ம் திகதி அந்நாட்டின் தேசிய அவைக்கும்(நாடாளுமன்றம்), மாகாண அவைகளுக்கும்(சட்டப்பேரவை) தேர்தல் நடைபெற்றது. அன்றைய தினம் காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. இதையடுத்து, உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்குச்சீட்டு மூலம் தேர்தல் நடைபெற்றதால் வாக்கு எண்ணும் பணி இன்னும் முடிவுக்கு வரவில்லை. இன்று நண்பகல் […]
காசாவில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் புல் சாப்பிடும் நிலைக்குத் தள்ளப்படுவதாக சர்வதேச தொண்டு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. ”காசாவில் உள்ள ஒவ்வொரு நபரும் இப்போது பசியுடன் உள்ளனர், மேலும் மக்கள் தங்கள் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய ஒரு நாளைக்கு 1.5 முதல் 2 லிட்டர் பாதுகாப்பற்ற தண்ணீரைக் கொண்டுள்ளனர்” என்று ஆக்ஷன் எய்ட் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. ரஃபாவில் தாக்குதல்களை தீவிரப்படுத்துவது ” பேரழிவு விளைவுகளை” ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துளளது. ஆக்ஷன் எய்ட் பாலஸ்தீனத்தின் […]
ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்தின் கிரின்டாவிக் நகரில் உள்ள எரிமலை நேற்று(08) திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியுள்ளது. இதன்போது எரிமலையில் இருந்த பாரிய அளவுக்கு தீப்பிழம்புகள் வெளியேறியுள்ளது. நெருப்பு குழம்புகள் குறித்த எரிமலையிலிருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு நெருப்பு குழம்புகளாக ஓடியுள்ளதுடன் இதற்கிடையே அந்த பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதோடு, இதன் காரணமாக மக்கள் சிறிது நேரம் பதற்றம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜோர்தானில் இரண்டு ஆடைத்தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் 66 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். குறித்த இலங்கையர்கள் தொழிலை இழந்த நிலையில் இன்று (09.02.2024) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர். ஜோர்தானில் இத்தொழிற்சாலைகளை நடத்தி வந்த இரண்டு நிறுவனங்கள் அங்கு பணியாற்றிய ஊழியர்களுக்கு எவ்வித அறிவித்தலையும் வழங்காது தொழிற்சாலைகளை மூடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் குறித்த தொழிற்சாலைகளில் பணியாற்றிய இலங்கையர்கள் குழுவொன்று தமக்கு கிடைத்த சலுகைகளைப் பெற்றுக்கொண்டு கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று வந்தடைந்துள்ளது. இதே தொழிற்சாலையில் பணிபுரிந்த மற்றுமொரு இலங்கை குழுவினர் […]
ஐஸ்லாந்து – கிரின்டாவிக் நகரில் உள்ள எரிமலை நேற்று திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் எரிமாலை குழம்புகள் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஓடியதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை 4.56 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 115 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3ஆக பதிவாகியுள்ளதுடன் நிலநடுக்கத்தால் வீடுகள் லேசாக அதிர்ந்தன. எனினும் இதுவரை சுனாமி எச்சரிக்கை எதுவும் பிறப்பிக்கப்படவில்லை
வேலை மாற்றம் முடிந்த பிறகு தங்கள் முதலாளிகளிடமிருந்து வரும் நியாயமற்ற தொலைபேசி அழைப்புகள் மற்றும் செய்திகளைப் புறக்கணிக்கும் உரிமையை உறுதிப்படுத்த புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த ஆஸ்திரேலியா நடவடிக்கை எடுத்து வருகிறது. சட்டத்தை மீறும் முதலாளிகளுக்கு எதிராக அபராதம் விதிக்க ஏற்பாடுகள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுவதோடு,. நாட்டின் தொழில்துறை தொடர்பான பல சட்டங்களில் திருத்தம் கொண்டு வர திட்டமிடப்பட்டு, அதன் கீழ் “துண்டிக்கும் உரிமை” என்ற புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. புதிய சட்டம் ஊழியர்களுக்கு வேலை-வாழ்க்கை சமநிலையில் இருக்க […]
வியட்நாமின் மத்திய ஹைலேண்ட் மாகாணமான கோன் தும் பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கங்கள் முறையே 4.0, 3.3, 2.8, 2.5, மற்றும் 3.7 என்ற ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதுடன் வியட்நாமின் மத்திய ஹைலேண்ட் மாகாணமான கோன் தும் பகுதியில் ஒரு மணிநேரத்திற்குள் தொடர்ந்து 5 முறை பதிவாகிய அதிர்வினால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் அதிர்ந்துள்ளதுடன், யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இன்று US காங்கிரஸ் உறுப்பினர்களை பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சந்தித்துள்ளார். சந்திப்பின் பின்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், இன்று நான்கு US காங்கிரஸ் உறுப்பினர்களை சந்தித்தேன். விசேடமாக Congressman Wiley Nickel, Congresswoman Deborah Ross, Congressman Jamie Raskin, Congressman Danny K. Davis. இவர்கள் நான்கு பேரும் தமிழர் நிலைமை தொடர்பில் தீவிரமாக அக்கறை செலுத்தியவர்கள். குறிப்பாக முத்த மூன்று Congress உறுப்பினர்களும் இலங்கை தமிழர்கள் விவகாரம் தொடர்பாக தீர்மானம் 427 […]
இலங்கையர்கள் தொழில் புரியும் தென்கொரியாவின் நாசு பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இலங்கையைச் சேர்ந்த சுமார் 200 பேர் அங்கு தொழிற்புரிவதாகவும், தீயினால் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் அங்கு பணிபுரியும் இலங்கையர் ஒருவர் தெரிவித்துள்ளார்.