28.4 C
Jaffna
September 19, 2024
உலக செய்திகள்

ஹமாஸ் ஆயுதக்குழு தலைவர் கொல்லப்பட்டார்

ஹமாஸ் ஆயுதக்குழு தலைவர் இஸ்மாயில் ஹனியி ஈரானில் மர்மமான முறையில் கொல்லப்பட்டார். அவர் எவ்வாறு கொல்லப்பட்டார் என்பது பற்றிய பரபரப்பு தகவலை ஈரான் தற்போது வெளியிட்டுள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் திகதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.

மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் ஒப்பந்த அடிப்படையில் பணய கைதிகள் 100க்கும் மேற்பட்டோரை மீட்டது. ஆனால், 110க்கும் மேற்பட்டோர் இன்னும் பணய கைதிகளாக ஹமாஸ் பிடியில் உள்ளதாகவும், அதில் சிலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

மேலும், காசாவில் இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 39 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், மேற்குகரையில் ஏற்பட்ட மோதலில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, இஸ்ரேல் மீதான அக்டோபர் 7 பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹமாஸ் ஆயுதக்குழுவின் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியி (வயது 62) ஈரானில் கடந்த 31ம் தேதி மர்மான முறையில் கொல்லப்பட்டார்.

ஈரான் அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற இஸ்மாயில் ஹனியி தெஹ்ரானில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கி இருந்தபோது மர்மான முறையில் கொல்லப்பட்டார். விருந்தினர் மாளிகையில் இஸ்மாயில் தங்கி இருந்த அறையில் அதிகாலை 2 மணியளவில் பயங்கர வெடி சத்தம் கேட்டது.

Related posts

லெபனானில் வசிக்கும் மக்களை வெளியேறுமாறு கோரிக்கை

Nila

கம்போடியாவுடனான போட்டியுடன் கிரிக்கெட்டைப் போன்றே கால்பந்தாட்டத்தையும் இலங்கை இரசிகர்கள் நேசிப்பர் 

User1

ஆங்கில கால்வாயில் கவிழ்ந்தது குடியேற்றவாசிகளின் படகு- கர்ப்பிணி பெண் உட்பட 12 பேர் பலி

User1

Leave a Comment