– மாவீரர் தின பாதுகாப்பு தரப்பினரின் இடையூறு தொடர்பாக நான் அறியவில்லை பாதுகாப்பு செயலர் சம்பத் துயகொந்த தெரிவிப்பு மாவீரர் தினம் தொடர்பாக முப்படை மற்றும் பொலிசாரால் இடையூறுகள் விளைவிக்கப்பட்டுள்ளன இது தொடர்பில் உங்கள் கருத்து நாம் யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்வதற்கு எந்த விதமான தடைகளையும் விதிக்கவில்லை இதனை எமது அரசாங்கம் ஒரு கொள்கையாக பிரகடனபடுத்தியுள்ளது.இவ்வாறான நிலையில் சட்டத்திற்குட்படாது சட்டவிரோதமான முறையில் நினைவேந்தல் முன்னெடுக்கபடுமாயின் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும்.பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வீதியால் சென்ற பொழுது பொலிசார் ஏன் தடுத்தனர்? அந்த விடயம் தொடர்பில் நான் அறிந்திருக்கவில்லை ஆனால் நினைவேந்தல் உயிரிழந்த உறவுகளை உறவினர்கள் அன்பானவர்கள் நினைவேந்தல் எமது அரசு தடை விதிக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.