27.9 C
Jaffna
September 16, 2024
உலக செய்திகள்

இஸ்ரேலுக்குள் களமிறங்கிய அமெரிக்கா படைகள் – அதிகரிக்கும் போர் பதற்றம்

இஸ்ரேல் – ஈரான் நாடுகளுக்கிடையே போா்ப் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இஸ்ரேலிற்கு ஆதரவாக அமெரிக்கா தனது மேலதிக படைகளை மத்திய கிழக்கில் களமிறக்கியுள்ளதாகத் தொிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானில் ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டதற்குப் பழிவாங்க இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் அறிவித்துள்ளது. இதனால், இஸ்ரேல் – ஈரான் இடையே பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

குறிப்பாக லெபனானின் தெஹ்ரான் ஆதரவு ஹில்புல்லா குழு இஸ்ரேலுக்குள் ஆழமாக சென்று தாக்கும் என்று உள்ளூர் ஊடகங்கள் மற்றும் போாியல் ஆய்வாளா்கள் கருத்துக் கணிப்புக்களை வெளியிட்டுள்ளனா்.

இந்நிலையில், ஹமாஸ் – ஹிஸ்புல்லா மற்றும் ஹவுதிகள் உள்ளிட்ட ஈரானின் அனைத்து அமைப்புக்களினதும் அச்சுறுத்தல்களில் இருந்து இஸ்ரேலைப் பாதுகாப்பதற்காக அமெரிக்கா தனது படைகளை மத்திய கிழக்கில் களமிறக்கியுள்ளதாகத் தொிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் தாக்குதலைத் தடுப்பதற்காக மத்திய கிழக்கிற்கு மேலதிக  போர்க்கப்பல்கள் மற்றும் அதிகளவிலான நவீன போர் விமானங்களை அனுப்பியுள்ளதாக அமெரிக்க இராணுவத் தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

Related posts

போர் நிறுத்த திட்டத்தை முன்வைக்க தயாராகும் உக்ரைன்

User1

பிரேசிலில் எக்ஸ் தள அலுவலகத்தை மூடுவதாக எலான் மஸ்க் அறிவிப்பு

User1

உலகிலேயே இரண்டாவது பாரிய வைரம் கண்டுபிடிப்பு

User1

Leave a Comment