பாதுகாப்பு செயலர் சம்பத் துயகொந்த யாழில் தெரிவிப்புதேசிய மக்கள் சக்தியின் ஆட்சிக்காலம் நிறைவடைய முன் பாதுகாப்பு படைகளின் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படும் என பாதுகாப்பு செயலர் யாழில் இன்றுங தெரிவித்தார் ஊடகவியலாளர்களால் பின் வருமாறு எழுப்பபட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கும் பொழுதே அவர் இவ்வாறு தெரிவித்தார் இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் யாழ் மாவட்டத்தில் 2700 ஏக்கர் காணகளே விடுவிக்கப்பட வேண்டி உள்ளது விடுவிக்கபடுமா ?காணவிடுவிப்பு தொடர்பில் நாம் சிந்தித்து வருகின்றோம். எதிர்காலத்தில் நாங்கள் சரியான மதிப்பீட்டை செய்வோம் . ,அது குறித்து முடிவு செய்வோம் .தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் ஐந்து அல்லது ஆறு வருடங்களே அதன் கால எல்லையாக உள்ளது குறித்த காலத்தில் மக்களின் நிலங்கள் முழுமையாக விடுவிக்க படுமா ?ஆம் அதனை தான் நான் கூறுககன்றேன்.நாங்கள் மீண்டும் காணி விடுவிப்பு தொடர்பில் மதிப்பீடு செய்துள்ளோம். பாதுகாப்பு மற்றும் ஏனயை காரணங்களின் அடிப்படையில் நாம் சில முடிவுகளை எடுத்துள்ளோம் . நிச்சயமாக நேர்மறையாக இந்த விடயத்தில் ஈடுபடுவோம். ஏற்கனவே சில வீதிகளை நாம் விடுவித்துள்ளோம்.அத்துடன் இந்த நாட்டு மக்களின் நலன் குறித்து நாம் எப்பொழுதும் கரிசனையுடையவர்களாகவே உள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.