Browsing: இலங்கை செய்திகள்

யாழ்ப்பாண பொலிஸ் நிலைய வருடாந்த பொலிஸ் அணிவகுப்பும், பொலிஸ் பரிசோதனையும் இன்று காலை சிறப்பாக இடம்பெற்றது யாழ்ப்பாண பொலிஸ் நிலைய வருடாந்த பொலிஸ் பரிசோதனை நிகழ்வும் பொலிஸ்ஸ் அணிவகுப்பு நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது குறித்த பரிசோதனை நிகழ்வில் யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் நிசாந்த  பரிசோதனைகளை முன்னெடுத்ததோடு பொலிசாரின் அணிவகுப்பு மரியாதையும் இடம் பெற்றது. அணிவகுப்பு நிகழ்வில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் கடைமையாற்றும் பொலிசாரின் சீருடைகள், ஆயுதங்கள் வாகனங்கள், பரிசோதிக்கப்பட்டதோடுபொலிசாருக்கான விசேட அறிவுரைகளும் […]

ஹரிகரன் இசை நிகழ்வில் சிறு தடங்கல் மற்றும் அசௌகரியம் காரணமாக, நுழைவு சீட்டு மூலம் கிடைக்கப்பெற்ற வருவாய் முழுவதையும் மீளளிப்பதற்கு முடிவு செய்துள்ளேன் என நொதேர்ன் யூனியின் தலைவர் பத்மநாதன் இந்திரகுமார் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற இசை நிகழ்வில் ஏற்பட்ட குழப்பங்கள் தொடர்பில், விளக்கமளிக்கும் விதமாக ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.   குறித்த அறிக்கையில், இலங்கை வரலாற்றில் முதன் முறையாக இலட்சக்கணக்கான இரசிகப் பெருமக்களைத் தாண்டி வெகுவிமரிசையாக நொர்தேன் யூனி இன் […]

இன்று காலை வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, வட்டுக்கோட்டை சந்திக்கு அண்மித்த பகுதியில் இரண்டு முச்சக்கர வண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. இதன்போது இருவர் படுகாயமடைந்த நிலையில் அவசர நோயாளர் காவுவண்டி மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிக வேகம் காரணமாக இந்த விபத்து சம்பவித்துள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

யாழ்ப்பாணம் தொண்டமானாறு பகுதியில் உள்ள  விற்பனை நிலையத்தில் தவளையுடன் குளிர்களி வழங்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய சூழலில் உள்ள குளிர்பான விற்பனை நிலையமொன்றிலே நேற்று (14) குளிர்களி குடிக்க சென்றவருக்கே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் குறித்த குளிர்பான விற்பனை நிலையத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இந்த வருட இறுதியில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பிரதான கட்சிகள் தமது ஜனாதிபதி வேட்பாளர் மற்றும் ஜனாதிபதி தேர்தல் கூட்டணி தொடர்பில் கவனம் செலுத்தி வருகின்றனர். இவ்வாறானதொரு நிலையில், ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் எந்த வேட்பாளரையும் ஆதரிக்கும் தீர்மானத்தை இதுவரை தான் எடுக்கவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் ஒருவருக்கு ஆதரவாக சந்திரிகா களமிறங்குகிறார் என்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைமையை பொறுப்பேற்கவுள்ளார்  என கடந்த […]

நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்காக வற் வரி அதிகரிக்கப்பட்டதனால் அரசாங்கம் எதிர்பார்த்த வருமானம் தற்போது கிடைக்கப்பெற்று வருகின்றது என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்தார். இதேவேளை அதிகரிக்கப்பட்ட வற்வரியை மீண்டும் நூற்றுக்கு 15 வீதமாக குறைப்பதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது. ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று (14) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். பொருளாதார ரீதியில் மக்களுக்கு பாரிய நெருக்கடி நிலைமை […]

இலங்கையில் திருமண முறிவுகள் அதிகரித்துள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். மேல்மாகாண நீதிமன்றத்தினால் தனிநபர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்காக விசேட நிகழ்ச்சி ஒன்று தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் நேற்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார். 2022ஆம் ஆண்டு மாத்திரம் நீதிமன்றங்களில் 48,391 விவாகரத்து வழக்குகள் விசாரிக்கப்பட்டுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்

இலங்கையில் காதலர் தினத்தில் சுமார் இரண்டு மில்லியன் ரோஜா பூக்கள் விற்பனை செய்யப்பட்டதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டு ரோஜா பூ விற்பனை நூற்றுக்கு நூறு வீதம் அதிகரித்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். நாட்டின் மலர் விற்பனை நிலையங்களில் சிகப்பு ரோஜா உள்ளிட்ட பல்வேறு ரோஜா மலர்கள் கடந்த 13ஆம் திகதி மாலையிலிருந்து விற்பனை செய்யப்பட்டதாகவும் ரோஜா பூக்களுக்கு அதிக அளவு கிராக்கி காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தனி ஒரு […]

இறக்குவானை பிரதேசத்தில் காதலியால் ஏற்பட்ட மனவேதனையால் இளைஞன் ஒருவர் உயிரை மாய்த்து கொண்டுள்ளார். இறக்குவானையை சேர்ந்த சத்தியசீலன் அரவிந்த் பிரசாத் என்ற 21 வயதுடைய இளைஞனே தனது வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞனின் தாயார் வெளிநாட்டில் பணிபுரிபவர் எனவும், அவரது தந்தை கொழும்பு பிரதேசத்தில் பணிபுரிந்து வருவதாகவும், மேலும் இரு சகோதரிகளுடன் வீட்டில் வசித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது. இந்த திடீர் மரணம் தொடர்பில் உயிரிழந்த இளைஞனின் உறவினர் ஒருவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார். யுவதி ஒருவருடன் காதல் […]

அஸ்​வெசும இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்று (15) முதல் ஆரம்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். ஒரு மாத காலத்திற்கு அந்த விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்கு எதிர்பார்ப்பதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இரண்டாம் கட்டத்தின் கீழ் சுமார் 4 இலட்சம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க “அத தெரண” வினவிய போது பதிலளித்தார். நிவாரண விண்ணப்பம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க விளக்கமளிக்கையில், […]