Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: இலங்கை செய்திகள்
மன்னார் மறை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் திருநீற்றுப் புதன் திருப்பலி இன்று புதன் கிழமை (14) காலை பங்குத்தந்தையர்களினால் ஒப்புக்கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் மன்னார் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்தில் காலை 6.30 மணிக்கு பங்குத்தந்தை எஸ்.அன்ரன் அடிகளார் தலைமையில் அருட்தந்தையர்கள் இணைந்து திருப்பலியை ஒப்புக் கொடுத்தனர். இதன் போது பங்கு மக்கள்,பாடசாலை மாணவர்கள்,அருட்சகோதரிகள் என பலரும் திருப்பலியில் கலந்து கொண்டனர். கிறிஸ்தவர்களின் புனித நாள் களில் ஒன்றான திருநீற்றுப் புதன் தினம் இன்றாகும்.இன்று […]
உட்கட்சி ஜனநாயகத்தைச் சிதைக்கும் வகையில் நடைபெறும் சூழ்ச்சிகளை முறியடித்து, உடனடியாக மாநாட்டை நடாத்துமாறு, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், கட்சியின் புதிய தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள சிவஞானம் சிறீதரனுக்கு அறிவுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், சாள்ஸ் நிர்மலநாதன் ஆகிய இருவரும் இணைந்து, நேற்றையதினம் (13), கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் இரா.சம்பந்தனை சந்தித்துக் கலந்துரையாடியபோதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கட்சியின் தலைமைப் பொறுப்பை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்வதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், நிருவாகிகள் தெரிவு தொடர்பில் […]
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக அபிவிருத்தி குழு கூட்டம் இன்று (14.02.2024) பிற்பகல் 12 மணிக்கு கரைதுறைப்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் அபிவிருத்தி குழு தலைவர் காதர் மஸ்தான் தலைமையில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் கரைதுறைப்பற்று பிரதேச சபை பிரதேச செயலாளர் ம.உமாமகள் பாராளுமன்ற உறுப்பினர்களது பிரதிநிதிகள், திணைக்கள தலைவர்கள், பிரதேச சபையின் செயலாளர், பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகள், அரச அதிகாரிகள், கிராம சேவையாளர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் […]
இன்று மதியம் 12.மணிக்கு நல்லதண்ணி நகரில் இருந்து சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய வந்த யாத்திரியர்களை ஏற்றிக் கொண்டு மஸ்கெலியா வழியாக ஹட்டன் சென்ற அரச பேருந்து இடையில் பயணிகள் ஏற்றியமை பற்றி தனியார் பேருந்து சாரதி மற்றும் நடத்துனருக்கும் ஏற்பட்ட வாக்கு வாதத்தில் அரச பேருந்தில் பயணித்த காலி பகுதியில் உள்ள இளைஞர்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்த தனியார் பேருந்து சாரதி மற்றும் நடத்துனருக்கும் கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல பட்டு […]
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக நாட்டுக்கு அந்நிய செலாவனியை பெற்றுத்தரும் சுற்றுலா துறையானது மிகவும் நலிவடைந்து உள்ளது. இந்த நிலையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் நூற்றுக்கணக்கான பிளமிங்கோ என சொல்லப்படும் வெளிநாட்டு பறவைகள் மன்னார் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளது டன் சுற்றுலா பயணிகளுக்கு சிறந்த அனுபவத்தை வழங்கி வருகிறது. தமிழில் இப்பறவை பெரும் பூநாரை என அழைக்கப்படுகிறது. இந்த பறவைகள் ஆழமற்ற ஏரிகள், சதுப்பு நிலங்கள் மற்றும் ஆப்பிரிக்கா, ஆசியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் மணல் […]
புதிய கிராம சேவையாளர்களுக்கான நேர்முகப் பரீட்சை அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி, புதிதாக 2,100 கிராம சேவையாளர்களை கடமையில் இணைத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. கிராம சேவையாளர்களை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான போட்டிப் பரீட்சை அண்மையில் நடைபெற்றதாக இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த குறிப்பிட்டுள்ளார் . இதில் பங்கு பற்றியவர்களின் பெறுபேறுகளின் அடிப்படையில் நேர்முகப்பரீட்சைக்கான அழைப்புக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் .
பம்பலப்பிட்டியிலுள்ள பல கோடி ரூபா பெறுமதியான பழைய மூன்று மாடி வீடொன்றின் பூட்டை உடைத்து உள்நுழைந்து அங்கு தங்கியிருந்தமை தொடர்பில் இரு தேரர்கள் உட்பட மூவரைக் கைது செய்ததாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர். மாலம்பே பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் பணிபுரியும் இரு தேரர்கள் உட்பட மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு தேரர்கள் உட்பட மூவர் தனது தனது வீட்டின் பூட்டை உடைத்து உள்நுழைந்து அங்கு பலாத்காரமாக தங்கியிருப்பதாக வீட்டின் உரிமையாளர் எனக் கூறிக்கொள்ளும் பெண் […]
கண்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அஸ்கிரிய பிரதேசத்தில் ரயிலில் விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 75 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் தொடர்பான தகவல்கள் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். மாத்தளையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த ரயிலில் மோதியே இவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் கண்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் பல்வேறு மதங்களின் அடையாளப் பாத்திரங்கள் குறித்தும், அவர்களை உயிருடன் பார்க்கும் வாய்ப்புகள் குறித்தும் அவ்வப்போது விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அண்மையில் இலங்கையில் நடந்த இதுபோன்ற சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கத்தோலிக்க மதத்தின் பிரதான பாத்திரமான இயேசுவின் தாயாக கருதப்படும் ‘அன்னை மரியாள்’ உருவத்தை ஒத்த உருவம் கொண்ட பெண் ஒருவர் கந்தானை பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் நடந்து செல்லும் காணொளியே இதற்கு காரணம். அடையாள விபரங்களை வெளிப்படுத்திய பொலிஸார் கத்தோலிக்கர்கள் வழிபடும் ‘அன்னை […]
பிரித்தானியாவின் தொழில் முயற்சியாளர்கள் இலங்கையில் உயர்கல்வித் துறையில் முதலீடு செய்ய ஆர்வமாக இருப்பதாக ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார். லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் பொதுநலவாய நிறுவன மற்றும் முதலீட்டுச் சபையுடன் (CWEIC) நடைபெற்ற வட்டமேசை கலந்துரையாடலின் போதே இவ்வாறு பிரித்தானிய நிறுவனங்களின் ஆர்வம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. கலந்துரையாடலில் பிரித்தானியாவின் 30 முன்னணி வணிகப் பிரமுகர்கள், மூலதனப் பிரதிநிதிகள், முதலீட்டு ஆலோசகர்கள், நிதி வல்லுநர்கள் மற்றும் ஏற்கனவே இலங்கையில் முதலீடுகளை மேற்கொண்டுள்ள வர்த்தகர்கள் எனப் […]