28.4 C
Jaffna
September 19, 2024
Uncategorizedஇந்திய செய்திகள்இலங்கை செய்திகள்

நிறைவுக்கு வந்த இந்திய – இலங்கை மித்ரா சக்தி இராணுவ பயிற்சி

இந்தியா மற்றும் இலங்கை இராணுவத்தினருக்கு இடையேயான இருதரப்பு ‘மித்ரா சக்தி’ பயிற்சியின் 10வது பதிப்பு முடிவடைந்துள்ளதாக, இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் மதுரு ஓயாவில் உள்ள இராணுவப் பயிற்சியகத்தில் ஆகஸ்ட் 12 முதல் இந்த இரண்டு வார கால பயிற்சிகள் நடைபெற்றன.

இந்தப் பயிற்சியானது, ஆயுதப் படைகளுக்கு இடையே இயங்கும் தன்மை மற்றும் பரஸ்பர புரிதலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.

அத்துடன், தொழில்முறை மரியாதை, தனிப்பட்ட பிணைப்பு மற்றும் விரிவான பயிற்சி தொடர்பு ஆகியவற்றின் அடிப்படையில் நெருக்கமான பாதுகாப்பு உறவை மேலும் ஆழப்படுத்த வாய்ப்பளிக்கிறது என்று உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

நாடுகடந்த பயங்கரவாதத்தை சமாளிப்பது, கூட்டு தந்திரோபாய நடவடிக்கைகளைமேற்கொள்வது மற்றும் போர் திறன்களை வளர்ப்பது போன்ற பயிற்சிகள் இதில் மேற்கொள்ளப்பட்டன.

இந்தியாவின் ‘அண்டை நாடுகளுக்கு முதலில்” என்ற கொள்கை மற்றும் ‘பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு என்ற தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க இந்த இராணுவப் பயிற்சிகள் நடைபெற்றதாக உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது. 

Related posts

கெஹலியவுக்கு ஒட்சிசன்!

sumi

இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்படும் சலுகைகள்!

User1

அன்புக்குரிய முஸ்லிம் வாக்காளர்களுக்கு சஜித் பிரேமதாசாவின் திறந்த மடல்!

User1

Leave a Comment