Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: இலங்கை செய்திகள்
கற்பிட்டி பிரதேச செயலகத்தில் பணிபுரியும் பெண் கிராம உத்தியோகத்தரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் கிராம உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கற்பிட்டி பிரதேச செயலகத்தில் பணியாற்றும் கிராம உத்தியோகத்தராவார். 35 வயதுடைய பெண் கிராம உத்தியோகத்தரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஜனவரி மாதம் 20 ஆம் திகதி இந்த பெண் கிராம உத்தியோகத்தரின் வீட்டிற்கு சென்ற சந்தேக நபர் அவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சி செய்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் […]
இலங்கையின் 76வது சுதந்திர தின நாளில் லண்டனில் தமிழர்கள் நடத்திய போராட்டத்திற்கு எதிராக தமது அரசாங்கம் பிரித்தானிய அரசாங்கத்திடம் முறையிடவுள்ளதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் அதிருப்தியை லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக ஐக்கிய இராச்சியத்திற்கு தெரிவிக்கவுள்ளதாக அலி சப்ரி தெரிவித்துள்ளார். இலங்கையிலும் ஏனைய நாடுகளிலும் தடைசெய்யப்பட்ட அமைப்பொன்றுக்கு ஆதரவாக லண்டனில் போராட்டம் நடத்துவதை இலங்கை அரசாங்கம் பிரித்தானியாவிலுள்ள வெளிவிவகார அமைச்சின் கவனத்திற்குக் கொண்டுவரவுள்ளதாக அவர் […]
வடமத்திய மாகாணத்தில் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பரீட்சைத் தாளில் வினாக்கள் இடம்பெறாமையினால் மாணவர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். தமிழ் மொழிமூல கணித பாட வினாத்தாளில் காணப்பட்ட இவ்வாறான தவறுக்கு மாகாண கல்விப் பணிப்பாளரின் அலட்சியமே காரணம் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் இருபது வருடங்களுக்கு ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கமே இந்நாட்டில் பதவியில் இருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். கம்பஹாவில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன இதனைக் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து கருத்துரைத்த அவர்; ”எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமோக வெற்றியீட்டுவார். இலங்கை வரலாற்றில் அதிகூடிய வாக்குகளைப் பெற்றுக்கொண்டவர் என்ற புதிய […]
வவுனியா, கோவில்குளம் பகுதியில் இளைஞர் ஒருவர் மீது கத்திக்குத்து இடம்பெற்றுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, சுந்தரபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வவுனியா, முதலாம் குறுக்குத்தெரு பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பணியாற்றியுள்ளார். இரவு வகுறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளரின் கோவில்குளம் பகுதியில் உள்ள வீட்டில் தங்கி நின்றுள்ளனர். இந்நிலையில், குறித்த வர்த்தக நிலைய உரிமையாளருக்கும், அங்கு பணியாற்றுபவருக்கும் இடையில் (13.02) காலை ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து வர்த்தக நிலைய உரிமையாளர் தன் மீது கத்தியால் […]
சுகாதார சேவைகளுடன் தொடர்புடைய பல சேவை நடவடிக்கைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் இது வெளியிடப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, மருத்துவமனைகள், நேர்சிங் ஹோம்கள், மருந்தகங்கள் மற்றும் பிற ஒத்த நிறுவனங்களில் நோயாளிகளின் பராமரிப்பு, வரவேற்பு, பாதுகாப்பு, போசனை ஊட்டல் மற்றும் சிகிச்சை தொடர்பாக தேவைப்படும் அல்லது செய்ய வேண்டிய அனைத்து சேவைப் பணிகள் அல்லது உழைப்பு அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
திருமணமாகாத (35) வயதுடைய பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவருக்கு ஏழு வருட கடூழிய சிறை தண்டனை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் உட்பட பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 05 லட்சம் ரூபாய் அபராத தொகை வழங்க வேண்டும் என நுவரெலியா மேல் நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பினை நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி விராஜ் வீரசூரிய (13.02.2024) பகல் வழங்கினார். வழக்கு தொடர்பாக மேலும் தெரியவருவதாவது. கந்தப்பளை ஹைபொரஸ்ட் […]
வலி நிறைந்த நினைவுகள் பாலா ஸ்ரோஸ் உரிமையாளர் பொன்னையா செல்வராசா நேற்றைய தினம் இறைவனடி சேர்ந்தார். 2007 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 06 திகதி இரவு 8:30 மணியளவில் ஆயுதங்களுடன் வந்த 6 பேர் கொண்ட இராணுவப்புலனாய்வு மற்றும் ஆயுத குழுவால் பொன்னையா செல்வராசா , சிவஞானம் செல்வதீபன் ஆகியோர் கடத்தப்பட்டு மூன்று மாதங்கள் வெலிகந்தை காட்டுப்பகுதியில் ஆயுத முனையில் தடுத்து வைக்கப்பட்டனர் , யுத்தகாலத்தில் வர்த்தகர்களை குறிவைத்து ஆயுத குழு கப்பம் கோரி கடத்தல்களை […]
நுண்நிதிய கடன் பிரச்சினையால் கிராமப்புறங்களில் சுமார் 28 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 38 முதல் 48 சதவீதம் என்ற அடிப்படையில் அதிக வட்டிக்கு கடன் வழங்கப்படுகிறது. நுண்கடன் திட்டங்களினால் பெண்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய கிழக்கு நாடுகளுக்கு இலங்கை பெண்கள் வீட்டுப் பணிப்பெண்களாகச் செல்வதற்கு நுண்கடன் திட்டங்கள் பிரதான காரணியாக அமைந்துள்ளது எனப் பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைக் குறைப்பது தொடர்பில் துறைசார் மேற்பார்வைக் குழுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கையில் நுண்நிதிய பிரச்சினை காரணமாகப் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார […]
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பெண் ஒருவர் , புறக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் அவரை விடுவிக்குமாறு கூறி பொலிஸாரை தாக்கிய சந்தேக நபரின் மூன்று சகோதரிகள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் நால்வரும் கொழும்பு மருதானை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதான சந்தேக நபரான பெண்ணிடம் இருந்து 600 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 200 மில்லிகிராம் ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த தாக்குதலில் காயமடைந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் […]