Browsing: இலங்கை செய்திகள்

கிழக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட உள்ள ஆசிரிய இடமாற்ற விடயம் தொடர்பில் மீண்டும் ஜனாதிபதி செயலாளரை சந்தித்து கலந்துரையாடி கிழக்கு ஆளுநருடன் பேசி இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது. இதனடிப்படையில், அம்பாறை மாவட்ட ஆசிரியர்கள் யாரும் மட்டக்களப்பு மாவட்டம் உள்ளடங்கலாக எந்த மாவட்டத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட மாட்டாது என்ற உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – முற்றவெளி மைதானத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இசைநிகழ்வு அசம்பாவிதங்களில் சிக்கி மூவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் 06 பேர் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு , பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

சதொச விற்பனை வலையைமைப்பில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் மீண்டும் விற்பனை செய்யப்படவுள்ளது. கடந்த சில வாரங்களாக இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் விற்றுத் தீர்ந்த நிலையில் சதொச விற்பனை நிலையங்களில் இந்திய முட்டைகள் விற்பனை இடைநிறுத்தப்பட்டிருந்தது.

நாடளாவிய ரீதியில் 4 இலட்சம் புதிய அஸ்வெசும பயனாளிகளைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரும் பணி இன்று (10) ஆரம்பமாகவுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது . இந்த திட்டத்தின் கீழ் கொடுப்பனவுகளைப் பெறுவதற்குத் தகுதியுடையவர்களுக்கு ஏப்ரல் முதலாம் திகதி முதல் கொடுப்பனவு வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அந்த வகையில் அஸ்வெசும பயனாளிகளை தெரிவு செய்யும் போது பல்வேறு தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில் சில நிபந்தனைகளை திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. […]

யாழ்ப்பாணம்-கொக்குவில் பகுதியில் டெங்கு நுளம்பு பரவும் சூழலை வைத்திருந்த 07 குடியிருப்பாளர்களுக்கு தலா 20, 000 ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்து, டெங்கு ஒழிப்பு பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், கொக்குவில் பகுதியில் பொது சுகாதார பரிசோதகர் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு நடவடிக்கையின்போது, டெங்கு நுளம்பு பெருகும் சூழலுடன் சுற்றாடலை வைத்திருந்த 07 பேருக்கு எதிராக யாழ்.மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த வழக்கு புதன்கிழமை (07) […]

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவின் கருத்துக்கமைய இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் வண்டிகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் சேவையில் இருந்து நீக்கப்பட்ட 200 பஸ்கள் புனரமைக்கப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

தென்கிழக்கு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு வந்த குடும்ப உறுப்பினர்களின் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அம்பாறை- சியம்பலாண்டுவ பிரதான வீதியின் தமண பொலிஸ் நியாயாதிக்க பகுதியிலுள்ள குருட்டு கந்த எனும் பிரதேசத்தில் இன்று (10) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் நான்கு பேர் காயமடைந்து சிகிச்சைகளுக்காக தமண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தமண பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி […]

இலங்கை பிரஜைகளாகிய ஒவ்வொருவரும் வெளிநாடுகளுக்கு 12 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமாக கடன்பட்டுள்ளனர் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார். கடந்த வருடம் ஒக்டோபர் மாத இறுதிக்குள் இலங்கை அரசாங்கம் வெளிநாடுகளுக்கு 28,095 பில்லியன் ரூபா கடனை செலுத்தாமல் மிகுதி வைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, வரிக் கொள்கையினால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை ஐக்கிய தொழில்முனைவோர் சங்கம் தெரிவித்துள்ளது.

நீதிமன்றத்தை தவிர்த்து 10 வருடங்களாக தலைமறைவாக இருந்த சந்தேகநபர் ஒருவர் மாவனெல்ல பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலை மாணவி ஒருவரை பலாத்காரம் செய்த சம்பவம் தொடர்பில் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் ஆஜராகாமல் நீதிமன்றத்தை தவிர்த்திருந்தார். Nortonbridge, Teburton தோட்டத்தில் வசிக்கும் 29 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் தாம் வாழ்ந்த தோட்டத்தில் 11 வயது பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் நோர்டன்பிரிட்ஜ் பொலிஸாரால் கைது செய்யப்படுவதற்கு தயாராக […]

அட்டன் – நோட்டன் பிரதான வீதியில் சவுத் வனராஜா பகுதில் பாரிய மரமொன்று வீதியின் குறுக்கே சரிந்து வீழ்ந்துள்ளமையினால் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது. இன்று காலை 09.45 மணியளவிலே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.