Browsing: இலங்கை செய்திகள்

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 7 லட்சம் வலி நிவாரணி மாத்திரைகள் நேற்று இரவு படகுடன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அடுத்த புதுமடம் கடற்கரையில் இருந்து நாட்டுப்படகில் வலி நிவாரணி மாத்திரைகள் இலங்கைக்கு கடத்தப்படுவதாக கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மரைன் பொலிசார் பெரிய பட்டினம் கடற்கரையில் வைத்து ஒரு நாட்டுப் படையும் அதிலிருந்து சுமார் 7 லட்சம் வலி நிவாரணி மாத்திரைகளையும் பறிமுதல் […]

இலங்கை தொடர்பான இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கையில் குறிப்பிடத்தக்க மாற்றமாக கருதப்படும் வகையில், மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) தலைவர் பேச்சுவார்த்தைக்காக புதுடெல்லிக்கு அழைக்கப்பட்டுள்ளார். தேசிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸநாயக்க தலைமையிலான குழுவொன்று இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இது குறித்து சமூக வலைத்தளமான எக்ஸ் இல் பதிவிட்டுள்ள கலாநிதி ஜெய்சங்கர், அநுர குமார திஸநாயக்கவை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைவாதாக கூறியுள்ளார். […]

இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் 14 மாதங்கள் நிரம்பிய குழந்தை ஒன்று உயிரிழந்தமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சாவகச்சேரி – இத்தியடி பகுதியை சேர்ந்த ரகுராம் சாந்திரா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குழந்தை இரண்டு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் குழந்தை இன்றையதினம் காலை 8 மணியளவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று பி.ப 1 மணியளவில் குழந்தை உயிரிழந்தது. குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை […]

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை பேரூந்துசாலைக்கு அண்மித்த மருதடி பகுதியில் சற்றுமுன் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் படுகாயமடைந்த வைத்தியர் ஒருவர் பருத்தித்துறை ஆதாரவைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் . சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, பருத்தித்துறை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த வைத்தியரும், எதிரே வந்த சிறிய ரக வாகனமும் எதிரெதிரே மோதியே குறித்த விபத்து இடம்பெற்றிருந்ததாகவும், பலத்த காயமடைந்த மருத்துவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையில் […]

வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார்க் கடையினுள் புகுந்தது ஏ-35 பிரதான விதியின் புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து பரந்தன் நோக்கி பயணித்த கார் ஒன்று இன்றைய தினம் மாலை 5.40 மணியளவில் விசுவமடு பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றை முந்தி செல்ல முற்பட்ட கார் வேகக்கட்டுப்பாட்டை இழந்து அருகிலே இருந்த கடையின் முன்பகுதியில் நிறுத்தி பொருட்கள் கொள்வனவு செய்வதற்கு வந்த வாடிக்கையாளர்கள் நிறுத்தி வைத்திருந்த இரண்டு மோட்டார் சைக்கிள் , ஒரு துவிச்சக்கரவண்டி மற்றும் முச்சக்கரவண்டி என்பனவற்றை மோதி […]

இலங்கையின் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் நோக்கில் இன்றையதினம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் சுற்றுலா ஒன்றினை ஆரம்பித்துள்ளனர். இந்த சுற்றுலாவானது யாழ்ப்பாணம் – பருத்தித்துறை – சக்கோட்டை முனையில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது. மூன்று இளைஞர்களும் முச்சக்கர வண்டி மூலம் இலங்கையின் 25 மாவட்டங்களையும் 40 நாட்களில் சுற்றிவரவுள்ளனர். நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக சுற்றுலாத்து வீழ்ச்சி அடைந்ததனால் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த சுற்றுலாத் துறையை மீண்டும் வளர்ச்சியடைய செய்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை […]

ஈழத்துக் குயில் கில்மிஷாவின் வெற்றியை பாராட்டி, அவர் கல்வி பயிலும் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி சமூகத்தினரால் இன்று கௌரவமளிக்கப்பட்டது. கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகளுக்கு பின்னர் இன்று பாடசாலைகள் ஆரம்பமாகின. இந்நிலையில் பாடசாலையில் நடைபெற்ற நிகழ்வில் கில்மிஷாவுக்கு கௌரவம் வழங்கப்பட்டது. இதில் கல்லூரி அதிபர், ஆசிரியர்கள், கல்லூரி மாணவிகள், அயல்பாடசாலை மாணவிகள் பலரும் கலந்துகொண்டனர். இந்தியாவின் தனியார் தொலைக்காட்சியின் பாடல் போட்டியில் கில்மிஷா பங்கேற்று வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் அண்மைக்காலமாக இறந்தநிலையில் ஆமைகள் கரையொதுங்கிவருகின்றன. இந்த நிலையில் கட்டைக்காட்டு கடற்கரையில் இன்றைய தினம் இறந்த நிலையில் இரண்டு ஆமைகள் கரையொதுங்கியுள்ளன. கடல் கொந்தளிப்பாகக் காணப்படுவதால் காயமடைந்த ஆமைகளே இவ்வாறு தொடர்ச்சியாக இறந்து தமது பிரதேசத்தில் அதிகளவு கரையொதுங்குவதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலயத்தில் சிறுவர் நம்பிக்கை எழுச்சி வாரம் பல்வேறு கலை நிகழ்வுகளுடன் அனுஷ்டிக்கப்பட்டுவந்தது. இந்நிலையில் சிறுவர் எழுச்சிவாரத்தின் இறுதி நாள் நேற்றைய தினம் கப்பலேந்திமாதா…

சுதந்திரத்தை கேலிக்கூத்தாக்கும் செயல்- பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் அறிக்கை சுதந்திரத்தின் அர்த்தத்தினைக் கேலிக்கூத்தாக்கும் அரசாங்கத்தினால் நேற்று கிளிநொச்சியில் நடத்தப்பட்ட வன்முறைக்கு எதிராக நாட்டு மக்கள் அனைவரும் இன,…