28.4 C
Jaffna
September 19, 2024
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

தபால் வாக்குச் சீட்டு விநியோகம் நிறைவடையும் தருவாயில் – ராஜித ரணசிங்க தெரிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குச் சீட்டுகளில் 95 வீதம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இராணுவத் தளங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச் சீட்டுக்களே இன்னும் விநியோகிக்கப்படவில்லை என சிரேஷ்ட பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த வாக்குச் சீட்டுகள் நாளை அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

712,318 அரச துறை ஊழியர்கள் 2024 இல் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

மொத்த வாக்காளர்களில் 76,977 பேர் குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு காலம் செப்டம்பர் 4, 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related posts

செந்தமிழ் பிரீமியர் லீக் கிண்ணம் ஈஸ்டன் யுனைட்டட் வசம்

User1

கிளிநொச்சியில் கோர விபத்து: விபத்தில் ஒருவர் பலி

User1

தேர்தல் முடியும்வரை சட்டவிரோத தொழிலாளர்களை கைதுசெய்யவேண்டாமென கட்சி ஒன்றின் தலைவரால் உத்தரவு?

User1

Leave a Comment