Browsing: இலங்கை செய்திகள்

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு கடந்த ஆண்டு சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக சுமார் 10,000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 9,434 முறைப்பாடுகள் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்துள்ளதாக அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார அமரசிங்க தெரிவித்துள்ளார். இவற்றில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான 2,242 முறைப்பாடுகள், பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான 472 முறைப்பாடுகள், கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான 404 […]

ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட வட்டவளை பகுதியில் உள்ள தமிழ் பாடசாலை ஒன்றில் பாடசாலை மாணவிகள் மூவரை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த அதே பாடசாலையின் விஞ்ஞான ஆசிரியர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பாடசாலையில் விஞ்ஞான ஆசிரியராக குறித்த ஆசிரியர் சுமார் 5 வருடங்கள் கடமையாற்றி வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். குறித்த ஆசிரியர் பாடசாலையில் பத்தாம் வகுப்பு படிக்கும் மூன்று சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்ததாகவும், அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி அசௌகரியம் ஏற்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. […]

சாந்தன் எந்த நிலையிலும் இலங்கையில் வந்து இறங்கலாம் என்ற கட்டத்தில்தான் இருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் வினவிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். சாந்தன் எந்த நிலையிலும் இலங்கையில் வந்து இறங்கலாம் என்ற கட்டத்தில்தான் நிலைமை உள்ளது. அமைச்சரவையில் இது தொடர்பில் பேசியிருந்தேன்.அதற்கு ஜனாதிபதி, வெளிவிவகார அமைச்சர், நீதி அமைச்சர் உள்ளிட்டோர் அவர் இங்கு வருவதில் எவ்வித பிரச்சினையும் இல்லை என தெரிவித்தனர். இது தொடர்பில் சம்மந்தப்பட்டவர்களிற்கு அறிவித்துள்ளோம். […]

இலங்கை தமிழ் அரசுக் கட்சி மாநாட்டிற்கு தடை விதிக்க கோரி யாழ்ப்பாண நீதிமன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாவை சேனாதிராஜா, சி.சிறீதரன் எம்.ஏ.சுமந்திரன், குகதாசன், குலநாயகம், யோகேஸ்வரன் ஆகிய ஆறு பேருக்கு எதிராகவே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சியின்  உறுப்பினர் ஒருவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையே இன்று விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்துவதற்கு திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் இன்று இடைக்கால தடைவிதித்துள்ளது.

பாடசாலையில் எழுதும் மேசை தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக பாடசாலை மாணவர் ஒருவரை தாக்கியதாக கூறப்படும் இருவரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மெல்சிறிபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர். மெல்சிறிபுர  – உடம்பிட்ட பிரதேசத்தில் நேற்று (14) மாலை இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. மெல்சிறிபுர  – கெந்தலவ – விகாரகம பிரதேசத்தில் வசிக்கும் 15 வயதுடைய மாணவன் ஒருவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார். இவர் ரிதிகம – உதம்மித மகா வித்தியாலயத்தில் 11ஆம் ஆண்டில் கல்வி கற்று வருகிறார். நேற்று, […]

காதலர் தினத்தில் முன்னாள் காதலரின் இரண்டு கால்களையும் உடைத்த யுவதி தொடர்பான செய்தி காலியில் பதிவாகியுள்ளது. குறித்த யுவதி கடந்த பத்து வருடங்களுக்கு முன்னர் காதலித்து வந்த வாலிபன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்துவந்த நிலையில் முன்னாள் காதலனை ஆசை வார்த்தைகள் கூறி அழைத்து தனது கணவனுடன் சேர்ந்து குறித்த நபரின் கால்களை உடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவில் உள்ள நியூ டலண்ட் சிறுவர் கழகத்தின் தலைவி முகம்மது இஸ்மாயில ரணா சுக்ரா, பூட்டான் நாட்டில் நடைபெற இருக்கும் சார்க் உச்சி மாநாட்டில் இலங்கையின் பிரதிநிதியாக கலந்துகொள்ளவுள்ளார். இவர் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கதைகூறல் போட்டியில் தேசிய விருது பெற்றதன் அடிப்படையில், சார்க் உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. முகம்மது இஸ்மாயில் ரணா சுக்ரா, ஓட்டமாவடி 01 208பி/2 கிராம உத்தியோகத்தர் பிரிவில் இயங்கும் நியூ டலண்ட் சிறுவர் கழகத்தின் […]

மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் புதியதொரு திருப்புமுனையை ஏற்படுத்திய ஆளுநரின் செயல். மாற்றுத்திறனாளிகள் எனப்படுவோர் தமது தேவைகளுக்கு குடும்பங்களையே எதிர்பார்த்து வாழ்கின்றனர். இவ்வாறானவர்கள் தமது வாழ்க்கையினை வெற்றிகரமாக கொண்டு செல்வதற்கு பல தடைகளையும் சிரமங்களையும் எதிர் கொள்கின்றனர். இவ்வாறானவர்களை இனங்கண்டு இவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வண்ணம் மதிப்புக்குரிய கிழக்கு மாகாண ஆளுநர் அவர்கள் சுயதொழில் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தது எல்லா தேவைகளுக்கும் குடும்பங்களை நம்பியே காலம் தள்ளியே இவர்களின் முழு வாழ்க்கையுமே மாற்றி அமைக்கும் அளப்பெரிய உதவியாகும். இந்த நிகழ்வில் […]

யாழ்ப்பாண பொலிஸ் நிலைய வருடாந்த பொலிஸ் அணிவகுப்பும், பொலிஸ் பரிசோதனையும் இன்று காலை சிறப்பாக இடம்பெற்றது யாழ்ப்பாண பொலிஸ் நிலைய வருடாந்த பொலிஸ் பரிசோதனை நிகழ்வும் பொலிஸ்ஸ் அணிவகுப்பு நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது குறித்த பரிசோதனை நிகழ்வில் யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் நிசாந்த  பரிசோதனைகளை முன்னெடுத்ததோடு பொலிசாரின் அணிவகுப்பு மரியாதையும் இடம் பெற்றது. அணிவகுப்பு நிகழ்வில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் கடைமையாற்றும் பொலிசாரின் சீருடைகள், ஆயுதங்கள் வாகனங்கள், பரிசோதிக்கப்பட்டதோடுபொலிசாருக்கான விசேட அறிவுரைகளும் […]

ஹரிகரன் இசை நிகழ்வில் சிறு தடங்கல் மற்றும் அசௌகரியம் காரணமாக, நுழைவு சீட்டு மூலம் கிடைக்கப்பெற்ற வருவாய் முழுவதையும் மீளளிப்பதற்கு முடிவு செய்துள்ளேன் என நொதேர்ன் யூனியின் தலைவர் பத்மநாதன் இந்திரகுமார் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற இசை நிகழ்வில் ஏற்பட்ட குழப்பங்கள் தொடர்பில், விளக்கமளிக்கும் விதமாக ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.   குறித்த அறிக்கையில், இலங்கை வரலாற்றில் முதன் முறையாக இலட்சக்கணக்கான இரசிகப் பெருமக்களைத் தாண்டி வெகுவிமரிசையாக நொர்தேன் யூனி இன் […]