Browsing: இலங்கை செய்திகள்

வடமராட்சி பிரதேச கல்வி புலமையாளர்களில் ஒருவரான யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்வித்துறை முன்னாள் சிரேஷ்ட  விரிவுரையாளர் கலாநிதி தம்பிஐயா கலாமணி தனது 72 ஆவது வயதில் நேற்று சனிக்கிழமை(10) அதிகாலை காலமானார். அல்வாய் தெற்கைச் சேர்ந்த அன்னார் ஆரம்ப கல்வியை வதிரி தேவரையாளி இந்து கல்லூரியிலும் இடைநிலை கல்வியை நெல்லியடி மத்திய கல்லூரியிலும் கற்று யாழ். பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொண்டு கலைப்பட்டதாரியானார். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பகுதி நேர விரிவுரையாளராக இணைந்து கலைப்பீட விரிவுரையாளரானார். மேலும் உயர் கற்கைகளை மேற்கொண்டு […]

தென்னிந்தியப் பாடகர் ஹரிகரன் தலைமையில் பல கலைஞர்கள் கலந்துகொண்ட இசை நிகழ்ச்சியில் இடம்பெற்ற, விரும்பத்தகாத சம்பவங்கள் வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இவ்வாறான சம்பவங்கள் எமது மக்களை தொடர்ந்தும் துன்பத்தில் அமிழ்த்தி குளிர்காய விரும்பும் சுயநலத் தரப்புக்களுக்கு வாய்ப்பாக மாறிவிடும் எனவும் வருத்தம்  தெரிவித்துள்ளார்.  யாழ்ப்பாணம் முற்றவெளியில் நேற்று(09.02.2024) இடம்பெற்ற தென்னிந்திய திரைப்  பிரலங்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் ஏற்பட்ட குழப்பங்கள் தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவரினால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். இதுதொடர்பாக கடற்றொழில் […]

மன்னார் – சாவற்கட்டு பகுதியில் மோட்டர்சைக்கிள் தலைக்கவசத்திற்குள் மிகவும் சூட்சுமமான முறையில் ஐஸ் போதைப்பொருளை மறைத்து விற்பனைக்காக கொண்டு வந்த 31 வயது இளைஞன் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் இருந்து 20 கிராமிற்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

பணத்தை சேரித்து ஆசிரியர்களுக்கு பரிசு பொருட்களை வழங்குபவர்கள் சம்பந்தமாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆசிரியர்களுக்கு பரிசு பொருட்களை வழங்க தடைவிதித்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், இப்படியான சம்பவங்கள் தொடர்ந்தும் நடந்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது எனவும் கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அவ்வாறு பரிசு வழங்கினால் இனிமேல் கடுமையான சட்டநடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் பணித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட உள்ள ஆசிரிய இடமாற்ற விடயம் தொடர்பில் மீண்டும் ஜனாதிபதி செயலாளரை சந்தித்து கலந்துரையாடி கிழக்கு ஆளுநருடன் பேசி இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது. இதனடிப்படையில், அம்பாறை மாவட்ட ஆசிரியர்கள் யாரும் மட்டக்களப்பு மாவட்டம் உள்ளடங்கலாக எந்த மாவட்டத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட மாட்டாது என்ற உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – முற்றவெளி மைதானத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இசைநிகழ்வு அசம்பாவிதங்களில் சிக்கி மூவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் 06 பேர் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு , பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

சதொச விற்பனை வலையைமைப்பில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் மீண்டும் விற்பனை செய்யப்படவுள்ளது. கடந்த சில வாரங்களாக இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் விற்றுத் தீர்ந்த நிலையில் சதொச விற்பனை நிலையங்களில் இந்திய முட்டைகள் விற்பனை இடைநிறுத்தப்பட்டிருந்தது.

நாடளாவிய ரீதியில் 4 இலட்சம் புதிய அஸ்வெசும பயனாளிகளைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரும் பணி இன்று (10) ஆரம்பமாகவுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது . இந்த திட்டத்தின் கீழ் கொடுப்பனவுகளைப் பெறுவதற்குத் தகுதியுடையவர்களுக்கு ஏப்ரல் முதலாம் திகதி முதல் கொடுப்பனவு வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அந்த வகையில் அஸ்வெசும பயனாளிகளை தெரிவு செய்யும் போது பல்வேறு தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில் சில நிபந்தனைகளை திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. […]

யாழ்ப்பாணம்-கொக்குவில் பகுதியில் டெங்கு நுளம்பு பரவும் சூழலை வைத்திருந்த 07 குடியிருப்பாளர்களுக்கு தலா 20, 000 ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்து, டெங்கு ஒழிப்பு பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், கொக்குவில் பகுதியில் பொது சுகாதார பரிசோதகர் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு நடவடிக்கையின்போது, டெங்கு நுளம்பு பெருகும் சூழலுடன் சுற்றாடலை வைத்திருந்த 07 பேருக்கு எதிராக யாழ்.மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த வழக்கு புதன்கிழமை (07) […]

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவின் கருத்துக்கமைய இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் வண்டிகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் சேவையில் இருந்து நீக்கப்பட்ட 200 பஸ்கள் புனரமைக்கப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.