தமிழரசுக் கட்சியின் பொரும்பாலான உறுப்பினர்கள் பொது வேட்பாளருக்கான ஆதரவு நிலைப்பாட்டோடு உள்ளதால் அக் கட்சியிலிருந்து எழும் எதிர்ப்புத் தொடர்பில் கரிசனை கொள்ளத் தேவையில்லை என தமிழ் பொதுக்கட்டமைப்பு உறுப்பினர் அரசியில் ஆய்வாளர் எம்.நிலாந்தன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ்ப் பொதுக் கட்டமைப்பின் அலுவலகத்தில் இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.