Browsing: இலங்கை செய்திகள்

முன்னால் திரும்பிய மோட்டார் சைக்கிளை முட்டி தள்ளி வீதியை விட்டு விலகி காணிக்குள் புகுந்தது அரச பேருந்து யாழ்ப்பாணம் – தென்மராட்சி –  A 9 வீதி, நாவற்குழி பகுதியில் இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 4.15 மணியளவில் இடம்பெற்றது. A9 வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் திரும்ப முற்பட்டபோது பின்னால் பயணித்த அரச பேருந்து அதனை முட்டி தள்ளியதோடு பாதையை விட்டு விலகி காணிக்குள் புகுந்துள்ளது. இதன் போது மோட்டார் சைக்கிளுக்கு சேதங்கள் […]

அரச பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். குறித்த விபத்து இன்று மாலை யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் A9 வீதியில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் – அரியாலை ஸ்ரீ பார்வதி வித்தியாசாலையின் நிறுவுனர் அமரர் ஸ்ரீமான் வி.காசிப்பிள்ளையின் சிலை  திறப்பு விழா இன்று இடம்பெற்றது. இன்று மதியம் இடம்பெற்ற இந்த நிகழ்வின் ஆரம்பத்தில் வித்தியாசாலை வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள அமரர் வி.காசிப்பிள்ளையின் சிலை வவுணியா பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் சு.மோகனதாஸ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. குறித்த சிலையினை முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த பரமேஸ்வரன் றசாந்தன் எனும் இளம் சிற்பி தத்துரூபமான முறையில் வடிவமைத்துள்ளார். வவுணியா பல்கலைக்கழக வேந்தரும், பாடசாலையின் பழைய மாணவர் சங்க […]

அரச தனியார் பேருந்துகள் இடையில் ஏற்பட்ட மோதல்களில் இருவர் படுகாயம் அடைந்த நிலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இம் மோதல் காரணமாக இலங்கை போக்குவரத்து சபையின் சாரதியையும் நடத்துனரையும் கைது செய்ய கோரிக்கை முன் வைத்து மஸ்கெலியா நகரில் இருந்து சேவையில் ஈடுபட்டு வரும் தனியார் பேருந்து சேவைகள் அனைத்தும் தற்போது சேவையில் இருந்து விலகி கொண்டு உள்ளனர். இதனால் சாமிமலை, ஹட்டன், காட்மோர், நல்லதண்ணி, மற்றும் ஏனைய தனியார் பேருந்து சேவைகள் தற்காலிகமாக […]

மன்னார் மறை மாவட்டத்தில் உள்ள அனைத்து  ஆலயங்களிலும் திருநீற்றுப் புதன் திருப்பலி  இன்று புதன் கிழமை (14) காலை பங்குத்தந்தையர்களினால் ஒப்புக்கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் மன்னார் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்தில் காலை 6.30 மணிக்கு பங்குத்தந்தை எஸ்.அன்ரன் அடிகளார் தலைமையில் அருட்தந்தையர்கள் இணைந்து திருப்பலியை ஒப்புக் கொடுத்தனர். இதன் போது பங்கு மக்கள்,பாடசாலை மாணவர்கள்,அருட்சகோதரிகள் என பலரும் திருப்பலியில் கலந்து கொண்டனர். கிறிஸ்தவர்களின் புனித நாள் களில் ஒன்றான திருநீற்றுப் புதன் தினம் இன்றாகும்.இன்று […]

உட்கட்சி ஜனநாயகத்தைச் சிதைக்கும் வகையில் நடைபெறும் சூழ்ச்சிகளை முறியடித்து, உடனடியாக மாநாட்டை நடாத்துமாறு, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், கட்சியின் புதிய தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள சிவஞானம் சிறீதரனுக்கு அறிவுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், சாள்ஸ் நிர்மலநாதன் ஆகிய இருவரும் இணைந்து, நேற்றையதினம் (13), கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் இரா.சம்பந்தனை சந்தித்துக் கலந்துரையாடியபோதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கட்சியின் தலைமைப் பொறுப்பை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்வதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், நிருவாகிகள் தெரிவு தொடர்பில் […]

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக அபிவிருத்தி குழு கூட்டம் இன்று (14.02.2024) பிற்பகல் 12 மணிக்கு கரைதுறைப்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் அபிவிருத்தி குழு தலைவர் காதர் மஸ்தான் தலைமையில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் கரைதுறைப்பற்று பிரதேச சபை பிரதேச செயலாளர் ம.உமாமகள்  பாராளுமன்ற உறுப்பினர்களது பிரதிநிதிகள், திணைக்கள தலைவர்கள், பிரதேச சபையின் செயலாளர், பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகள், அரச அதிகாரிகள்,  கிராம சேவையாளர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் […]

இன்று மதியம் 12.மணிக்கு நல்லதண்ணி நகரில் இருந்து சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய வந்த யாத்திரியர்களை ஏற்றிக் கொண்டு மஸ்கெலியா வழியாக ஹட்டன் சென்ற அரச பேருந்து இடையில் பயணிகள் ஏற்றியமை பற்றி தனியார் பேருந்து சாரதி மற்றும் நடத்துனருக்கும் ஏற்பட்ட வாக்கு வாதத்தில் அரச பேருந்தில் பயணித்த காலி பகுதியில் உள்ள இளைஞர்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்த தனியார் பேருந்து சாரதி மற்றும் நடத்துனருக்கும் கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல பட்டு […]

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக நாட்டுக்கு அந்நிய செலாவனியை பெற்றுத்தரும் சுற்றுலா துறையானது மிகவும் நலிவடைந்து உள்ளது. இந்த நிலையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் நூற்றுக்கணக்கான பிளமிங்கோ என சொல்லப்படும் வெளிநாட்டு பறவைகள் மன்னார் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளது டன் சுற்றுலா பயணிகளுக்கு சிறந்த அனுபவத்தை வழங்கி வருகிறது. தமிழில் இப்பறவை பெரும் பூநாரை என அழைக்கப்படுகிறது. இந்த பறவைகள் ஆழமற்ற ஏரிகள், சதுப்பு நிலங்கள் மற்றும் ஆப்பிரிக்கா, ஆசியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் மணல் […]

புதிய கிராம சேவையாளர்களுக்கான நேர்முகப் பரீட்சை அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி, புதிதாக 2,100 கிராம சேவையாளர்களை கடமையில் இணைத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. கிராம சேவையாளர்களை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான போட்டிப் பரீட்சை அண்மையில் நடைபெற்றதாக இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த குறிப்பிட்டுள்ளார் . இதில் பங்கு பற்றியவர்களின் பெறுபேறுகளின் அடிப்படையில் நேர்முகப்பரீட்சைக்கான அழைப்புக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் .