Browsing: தொடர்பில்

புதிய பாடசாலை தவணை தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. இதன்படி, அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை எதிர்வரும் 16ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைகிறது. 2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணை பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் முகநூல் தொடர்பில் கடந்த 2023ம் ஆண்டில் 31,548 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக  இலங்கை கணனி அவசர பதிலளிப்பு பிரிவின் சிரேஸ்ட பாதுகாப்பு பொறியியலாளர் சாருக அமுனுபொல தெரிவித்துள்ளார். இவற்றில் அதிகளவான முறைப்பாடுகள் முகநூல் ஊடாக பெண்களை துன்புறுத்திய சம்பவங்கள் தொடர்பானவை என அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான 10774 சம்பவங்கள் நாடு முழுவதிலும் பதிவாகியுள்ளதுடன், போலி முகநூல் கணக்குகள் தொடர்பில் 5188 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், அனுமதியின்றி முகநூல் கணக்குகளுக்குள் பிரவேசித்தமை தொடர்பில் 7499 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நிதி […]

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு கடந்த ஆண்டு சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக சுமார் 10,000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 9,434 முறைப்பாடுகள் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்துள்ளதாக அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார அமரசிங்க தெரிவித்துள்ளார். இவற்றில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான 2,242 முறைப்பாடுகள், பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான 472 முறைப்பாடுகள், கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான 404 […]

இலங்கையில் திருமண முறிவுகள் அதிகரித்துள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். மேல்மாகாண நீதிமன்றத்தினால் தனிநபர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்காக விசேட நிகழ்ச்சி ஒன்று தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் நேற்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார். 2022ஆம் ஆண்டு மாத்திரம் நீதிமன்றங்களில் 48,391 விவாகரத்து வழக்குகள் விசாரிக்கப்பட்டுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்

இலங்கையில் வருடாந்தம் 250 முதல் 300 புற்று நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் உயிரிழப்பதாக மஹரகம வைத்தியசாலையின் சிறுவர் புற்றுநோய் நிபுணர் வைத்தியர் சஞ்சீவ குணசேகர தெரிவித்துள்ளார். சிறுவர் புற்றுநோய் தினத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டு பணியகத்தினால் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. அங்கு கருத்து தெரிவித்த விசேட வைத்திய நிபுணர் சுராஜ் பெரேரா, 2021ஆம் ஆண்டில் 578 ஆண் குழந்தைகளும் 454 பெண் குழந்தைகளும் பதிவாகியுள்ளதாக கூறியுள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய […]

தொல்லியல் திணைக்களத்தின் ஒழுங்கமைப்பில் பாரம்பரிய தமிழ் கலாசாரம் தொடர்பான விரிவுரை மற்றும் பயிற்சி பட்டறை நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணம் கோட்டையில் புதன்கிழமை (14) தொல்லியல் திணைக்கள உத்தியோகத்தர் பா.கபிலன் தலைமையில் குறித்த நிகழ்வு நடைபெற்றதுடன் வளவாளராக கலாசார திணைக்கள உத்தியோகத்தர் மார்க்கண்டு அருட்செல்வன் பங்குபற்றினார். யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள், தொல்லியல் திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் நலன் விரும்பிகள் என பலர் பங்குபற்றியிருந்தனர்.

காதலர் தினத்தில் சிறுவர்களுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டாலும் சிறுவர்களின் செயற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்துவது பெற்றோரின் பொறுப்பு என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர், சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார அமரசிங்க இதனை தெரிவித்துள்ளார். காதலர் தினம் போன்ற விசேட தினங்களைக் கொண்டாடும் போது 16 வயதிற்கும் குறைந்த சிறுவர்கள் தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்குமாறும் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு, பாலியல் துன்புறுத்தல் உட்பட அனைத்து வகையான […]

அரச சேவைகள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் வழங்கப்படாததன் காரணமாக தேசிய பாடசாலைகளுக்கு 54 அதிபர்களை நியமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். சுயாதீன ஆணைக்குழுவிற்கு ஓய்வுபெற்ற நபர்களை நியமித்ததன் மூலம் அதன் பணி வினை திறனற்றதாக மாறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 6 மாதங்களாக முயற்சித்து வருகிறோம், பொதுச் சேவை ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கவில்லை அதனை வர்த்தமானியில் வெளியிட.எனவே இந்த சுயாதீன ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டாலும் ஓய்வு பெற்றவர்களை நியமித்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காண […]

2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை 2024 ஆம் ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் நடைபெறும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து 2024 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை டிசம்பரில் நடைபெறும் எனவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். இதேவேளை, 2025 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஜனவரி 2 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

யாழ்.போதான வைத்திசாலையில் கடந்த வருடம் 5 ஆயிரத்து 510 குழந்தைகள் பிறந்துள்ளதாகவும், அதில் 47 குழந்தைகள் இறந்து பிறந்துள்ளதாகவும் வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்திய மூர்த்தி தெரிவித்துள்ளார்.