Browsing: சந்திப்பு.!

வலிகாமம் கிழக்கு பிரதேச செயலக பிரிவின் பிரதேச செயலாளர் மக்கள் சந்திப்பாக உரும்பிராய் தெற்கு கிராமத்தில் உள்ள செல்வபுரம் யோகபுரம் கிராமத்தை சேர்ந்த கிராம மட்ட அமைப்புக்கள், மக்கள்  ஆகியோரை செல்வபுர உதயசூரியன் பொதுமண்டபத்தில் நேற்று  14.02.2024 சந்தித்தார். இதில் பிரதேச செயலாளர் சிவசிறி ஐயா, உதவி பிரதேச செயலாளர், நிர்வாக கிராம அலுவலர், விளையாட்டு அலுவலர், இளைஞர் கழக அலுவலர் சிறுவர் பிரிவு அலுவலர்கள், பிரதேச செயலக அலுவலர்கள், கோப்பாய் பொலிஸ் பொறுப்பதிகாரி, பொலிஸ் மக்கள் […]

ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் திருமதி காமென் மொரெனோ (Carmen Moreno) அவர்களுக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாக்கவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (13) பிற்பகல் ம.வி.மு. தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இலங்கையின் பொருளாதார நெருக்கடி மற்றும் நடப்பு அரசியல் நிலைமை பற்றி இங்கு கலந்துரையாடப்பட்டது. அத்துடன் இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாத்தல், ஜனநாயகத்தை பாதுகாத்தலைப்போன்றே தேர்தல்களை பிற்போடுதல் பற்றியும் கவனத்திற்கு இலக்காக்கப்பட்டது. அத்துடன் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் (Online Safety […]

இலங்கைக்கான கனேடியத் தூதரகத்தின் அழைப்பின் பேரில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இன்றையதினம் (13) கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஸ் அவர்களை, கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பில், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், கனேடியத் தூதரகத்தின் அரசியல் ஆலோசகர் டானியல் வூட், அரசியல் அலுவலர் கணேசநாதன் சாகித்தியனன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டமைக்காக சிறீதரன் எம்.பிக்கு வாழ்த்துரைத்த தூதுவர்,  ஈழத்தமிழர்களின் அரசியல் நலன்சார்ந்து முன்னெடுக்கவுள்ள […]

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியன் ஜெய்சங்கர் நேற்று மாலை பேர்த் நகரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்தார். இதன் போது இந்தியாவுடனான இருதரப்பு திட்டங்களின் முன்னேற்றம் குறித்து கவனம் செலுத்தப்பட்டது

இந்தியா சென்றுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட குழுவினர் நேற்று கேரளா மாநிலத்தின் தொழில்துறை அமைச்சர் பி.ராஜிவை சந்தித்துள்ளனர். மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. ஐந்து நாள்கள் விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசநாயக்க உள்ளிட்ட குழுவினர் நேற்றைய இறுதி நாளில் இந்தியாவின் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி நிலவும் கேரளாவிற்கு சென்றிருந்தனர். இதன்போதுஇ தொழில் மற்றும் சட்டம் தொடர்பிலான அமைச்சர் பி.ராஜிவினை சந்தித்துள்ளனர்.

யாழ் மாவட்ட கிராமிய  கடற்றொழில் அமைப்புகளின் சம்மேளனத்தினர் இன்று யாழ்ப்பாணத்தில் ஊடக சந்திப்பை நடாத்தினர். இதன்போது, மீனவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை சுட்டிக்காட்டிய அவர்கள், அவற்றுக்கான தீர்வைப் பெற்றுத்தருமாறு உரிய தரப்பினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (07) பாராளுமன்றத்தில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. பாராளுமன்றத்தின் புதிய அமர்வின் ஆரம்பத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது விஞ்ஞாபனத்தை சமர்ப்பித்த பின்னர் சுமார் ஒரு மணிநேரம் இருவரும் கலந்துரையாடியுள்ளனர். இந்த நிகழ்வில் வேறு எவரும் கலந்து கொள்ளவில்லை, மேலும் என்ன பேசப்பட்டது என்பது வெளியிடப்படவில்லை.

மீனவர்களின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக முன்னாள் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேள முன்னாள் தலைவர் அ.அன்னராசா மற்றும் முன்னாள் உப தலைவர் நா.வர்ணகுலசிஙகம் ஆகியோர் வடமராட்சி ஊடக இல்லத்தில் நடாத்திய ஊடக சந்திப்பு.