28.2 C
Jaffna
September 8, 2024
இலங்கை செய்திகள்

ஐரோப்பிய ஒன்றிய தூதுவருக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரவிற்கும் இடையிலான சந்திப்பு..!

ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் திருமதி காமென் மொரெனோ (Carmen Moreno) அவர்களுக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாக்கவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (13) பிற்பகல் ம.வி.மு. தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடி மற்றும் நடப்பு அரசியல் நிலைமை பற்றி இங்கு கலந்துரையாடப்பட்டது. அத்துடன் இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாத்தல், ஜனநாயகத்தை பாதுகாத்தலைப்போன்றே தேர்தல்களை பிற்போடுதல் பற்றியும் கவனத்திற்கு இலக்காக்கப்பட்டது.

அத்துடன் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் (Online Safety bill) பற்றியும் இந்த உரையாடலின்போது கவனத்திற்கு இலக்காக்கப்பட்டதோடு இருதரப்பினருக்கும் இடையில் உறவுகளைப் பலப்படுத்திக்கொள்ளல் பற்றியும் கவனம் செலுத்தப்பட்டது.

இந்த சந்திப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை பிரதிநிதிகள் குழுமத்தின் பிரதிப் பிரதானி லார்ஸ் பிறெடால் (Lars Bredal) அவர்களும் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் விஜித ஹேரத்ரும் கலந்துக்கொண்டார்.

Related posts

கிளப் வசந்த் கொலை: மற்றொரு சந்தேக நபர் கைது !

User1

திருமலையில் பெரும் சோகம்-இருவர் பலி..!

sumi

துப்பாக்கி வேட்டுக்களால் அதிரும் கொழும்பு-குடும்பஸ்தருக்கு நேர்ந்த கதி..!

sumi