Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: இன்று
ஒவ்வொரு மாதத்திலும் வளர்பிறையில் வரக்கூடிய சஷ்டி தினத்தை பெரிய சஷ்டியாக கருதி முருகப்பெருமானுக்கு வழிபாடுகள் செய்வார்கள். அந்த வகையில் இன்றைய தினம் (15) வியாழக்கிழமையோடு வந்திருக்கும் இந்த சஷ்டியானது குபேர சஷ்டி என்று சொல்லப்படுகிறது. இந்த சஷ்டி நமக்கு செல்வ வளத்தை தரக்கூடியதாக அமைந்திருக்கிறது. அத்துடன் வியாழக்கிழமை குரு பகவானுக்கு உகந்த தினமாக கருதப்படுகிறது. இன்றைய சஷ்டி தினம் வியாழக்கிழமை உடன் வந்திருப்பதால் குருவின் அனுகிரகத்தையும் நமக்கு பெற்று தரும். இந்த வழிபாடு செய்ய விரும்புபவர்கள் காலையில் […]
நேற்று 09, ம் திகதி இன்று 10, ம் திகதி சனிக்கிழமை என்பதால் சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய அதிக அளவில் ஹட்டன் வழியாகவும் இரத்தினபுரி காவத்த வழியாகவும் யாத்திரியர்கள் வந்த வண்ணம் உள்ளனர் என நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாந்த வீரசேகர தெரிவித்தார். சுமார் ஒரு இலட்சத்தை தாண்டியுள்ளது பக்தர்களின் வருகை. நல்லதண்ணி மரே நெடுஞ்சாலையில் மற்றும் நல்லதண்ணி மஸ்கெலியா நெடுஞ்சாலையில் ரக்காடு கிராமம் வரை தற்போது வாகனங்கள் வீதியின் இரு பக்கங்களிலும் […]
மத்திய மலைநாட்டில் கடுமையான வெப்பம் நிலவும் போதும் இன்று காலை வேளையில் மத்திய மலைநாட்டில் கடும் காற்று வீசியதால் ஹட்டன் நோட்டன் பிரதான சாலையின் உள்ள வனராஜா தோட்ட பகுதியில் உள்ள பாரிய வாகை சரிந்து விழுந்தது அதனால் அவ் வீதியூடாக வாகனங்கள் போக்குவரத்து சில மணி நேரம் தடை ஏற்பட்டது. அதன் பின்னர் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர்கள் அந்த இடத்தில் சாய்ந்த பாரிய மரத்தை வொட்டி அகற்றினர். அனைத்து தொடர்ந்து போக்குவரத்து வழமைக்கு […]
தெல்லிப்பழை காசி விநாயகர் தேவஸ்தானத்தில் ஆலயத்திற்கு பயன்தரக்கூடிய ஒரு தொகுதி மரக்கன்றுகள் இன்று(9) .மாலை 4.00 மணியளவில் நாட்டப்பட்டது. காசி விநாயகர் ஆலய தொண்டர்களும் ; தெல்லிப்பழை பாலர் ஞானோதய சபை சிறுவர்களும் இணைந்து இம் மரநடுகை முன்னெடுக்கப்பட்டது.தினசரி வெள்ளிக்கிழமைகளில் அறநெறி வகுப்புக்கள் ஆலயத்தில் நடைபெற்றுவரும் நிலையில் அதனுடன் இணைந்த வகையில் சமுகப் பற்றையும் ஏற்படுத்துமுகமாகவே இச் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று (09) கண்டி பல்லேகல மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. பகல் – இரவு ஆட்டமாக இடம்பெறும் இன்றைய போட்டி பிற்பகல் 2.30 இற்கு ஆரம்பமாகவுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் 11 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் இடம்பெற்றுள்ள நிலையில்இ அதில் 7 போட்டிகளில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. எஞ்சிய நான்கு போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது. இதனிடையேஇ டெஸ்ட் போட்டியைப் போன்று […]
கிளிநொச்சி மாவட்ட பச்சிலைப்பள்ளி பிரதேசத்திற்குட்பட்ட புதுக்காட்டுச்சந்தி பகுதியில் இலவச மதிய உணவு வழங்கும் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சிலோன் சாய்ஸ் பிரைவேட் லிமிடெட் பசியோடு வருபவர்களுக்கு இங்கே இலவச மதிய உணவு வழங்கும் திட்டம் ஒன்றை ஆரம்பித்து வைத்துள்ளனர். திங்கள் முதல் ஞாயிறு வரை மு.ப 12.00மணியிலிருந்து 1.30வரை சேவை இடம்பெறும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இன்று US காங்கிரஸ் உறுப்பினர்களை பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சந்தித்துள்ளார். சந்திப்பின் பின்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், இன்று நான்கு US காங்கிரஸ் உறுப்பினர்களை சந்தித்தேன். விசேடமாக Congressman Wiley Nickel, Congresswoman Deborah Ross, Congressman Jamie Raskin, Congressman Danny K. Davis. இவர்கள் நான்கு பேரும் தமிழர் நிலைமை தொடர்பில் தீவிரமாக அக்கறை செலுத்தியவர்கள். குறிப்பாக முத்த மூன்று Congress உறுப்பினர்களும் இலங்கை தமிழர்கள் விவகாரம் தொடர்பாக தீர்மானம் 427 […]
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் தாயார் அமிர்தலிங்கம் செபமாலையின் இறுதி நல்லடக்கம் இன்று புதன்கிழமை மதியம் இடம் பெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் தாயார் அமிர்தலிங்கம் செபமாலையின் தனது 84 ஆவது வயதில் கடந்த திங்கட்கிழமை காலமானார். இந்த நிலையில் அவரது பூதவுடல் மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இன்று புதன்கிழமை காலை 10.30 மணியளவில் மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தில் […]
இலங்கையில் இருந்து அகதிகளாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட ஐந்து பேர் ஒன்றாம் மணல் தீடையில் தஞ்சமடைந்துள்ள நிலையில் இன்று புதன்கிழமை காலை அவர்களை மீட்டு மரைன் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசியத் தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இதனால் கடந்த 2022 ஆண்டு மார்ச் மாதம் முதல் இலங்கையில் இருந்து இலங்கைத் தமிழர்கள் தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்துள்ளனர். இந்நிலையில் இலங்கை வவுனியா […]
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று வைபவரீதியாக ஆரம்பித்துள்ளது. இது தொடர்பான ஒத்திகை நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்றது. அரசியலமைப்பினால் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய ஜனாதிபதி இன்று காலை 10.30 மணிக்கு நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைத்தார். ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கமைய, அவரது வருகையின் போது, மரியாதை வேட்டுக்கள் தீர்த்தல் மற்றும் வாகனத் தொடரணி என்பன இடம்பெறமாட்டாது என நாடாளுமன்ற படைக்கலச் சேவிதர் குஷான் ஜயரத்ன தெரிவித்துள்ளார். ஜனாதிபதியினால் அரசாங்கத்தின் கொள்கைப் […]