28.2 C
Jaffna
September 8, 2024
இலங்கை செய்திகள்

நாடாளுமன்ற அமர்வு இன்று ஆரம்பம்

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று வைபவரீதியாக ஆரம்பித்துள்ளது.

இது தொடர்பான ஒத்திகை நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

அரசியலமைப்பினால் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய ஜனாதிபதி இன்று காலை 10.30 மணிக்கு நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைத்தார்.

ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கமைய, அவரது வருகையின் போது, மரியாதை வேட்டுக்கள் தீர்த்தல் மற்றும் வாகனத் தொடரணி என்பன இடம்பெறமாட்டாது என நாடாளுமன்ற படைக்கலச் சேவிதர் குஷான் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியினால் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரை நிகழ்த்தப்பட்டதன் பின்னர் சபை நடவடிக்கை நாளை முற்பகல் 9.30 வரை ஒத்திவைக்கப்படவுள்ளது.

Related posts

சர்வதேச மட்டத்தில் சாதிக்க செல்லும் வடக்கின் வேங்கைகள்-யாழ் மைந்தனும் உள்ளடக்கம்..!{படங்கள்}

sumi

தென்பகுதியில் ஒன்றாக நீராடிய யாழ், மட்டக்களப்பைச் சேர்ந்த இரு சுகாதார பரிசோதகர்கள் உயிரிழப்பு !

User1

வெடுக்குநாரி மலையில் பிக்கு குழு சப்பாத்துக்காலுடன் அட்டகாசம்

sumi