உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
22 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

உளவள ஆலோசனை, பொறுப்புடன் செயற்படும் ஊடகங்களின் பிரதிநிதிகள் சமூகத்திற்கு மிகவும் அவசியமானவர்கள்

இலங்கை செய்திகள் 4 மணி நேரம் முன்
117 பார்வைகள்

தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக உளவள ஆலோசனை,பொறுப்புடன் செயற்படும் ஊடகங்கள் போன்றவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் சாரார் சமூகத்திற்கு மிகவும் அவசியமானவர்கள் என தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை, கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில் தெரிவித்தார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரிப் பட்டப்படிப்புகள் மற்றும் தொழில்சார் கற்றல் நிலையத்தின் ஏற்பாட்டில், ஆலோசனை வழங்கலில் தொழில்முறை டிப்ளோமா மற்றும் ஊடகவியல் டிப்ளோமா ஆகிய பாடநெறிகளை நிறைவு செய்த 85 மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று (21) பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழி பீட கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இவ்வருட சான்றிதழ் வழங்கும் நிகழ்வில், 2018/2019 கல்வியாண்டில் ஆலோசனை வழங்கல் டிப்ளோமா பாடநெறியை நிறைவு செய்த 48 மாணவர்களும், 2022ஃ2023 கல்வியாண்டில் ஊடகவியல் டிப்ளோமா பாடநெறியைப் பூர்த்தி செய்த 37 மாணவர்களுமாக மொத்தம் 85 பேர் தமது டிப்ளோமா சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட பேராசிரியர் பாஸில் தொடர்ந்தும் அங்கு உரையாற்றும்போது,

செயற்கை நுண்ணறிவு (AI), டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகள் உலகின் அனைத்து துறைகளிலும் புதிய மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்ற நிலையில், வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொள்ளும் மனப்பாங்கை ஒவ்வொருவரும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

வேகமாக மாறிவரும் உலகில் வெறுமனே சான்றிதழ்களையும் பட்டங்களையும் பெற்றுக்கொள்வதுடன் நின்றுவிடாமல், காலத்தின் தேவைக்கேற்ப தொழில்சார் திறன்களையும் வளர்த்துக்கொள்வது அவசியம்.

எதிர்காலத்தில் தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞானத் துறைகளிலும் வெளிவாரிப் பட்டப்படிப்புகளை அறிமுகப்படுத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

பொருளாதார நெருக்கடிகள், வேலையின்மை, குடும்பப் பிரச்சினைகள்,சமூக மாற்றங்கள் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் எனப் பல்வேறு சவால்களை மனித சமூகம் எதிர்கொண்டு வரும் இக்காலகட்டத்தில், உளவள ஆலோசனை வழங்குநர்களும் பொறுப்புணர்வுள்ள ஊடகவியலாளர்களும் சமூகத்திற்கு மிகவும் அவசியமானவர்கள் ஆகும்.

தாம் பெற்றுக்கொண்ட அறிவையும் திறன்களையும் சமூகத்தின் நன்மைக்காகப் பயன்படுத்தி, உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தும் ஆளுமைகளாக டிப்ளோமாதாரர்கள் உருவாக வேண்டும்.

1995ஆம் ஆண்டு பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட பின்னணியை நோக்கினால், 2000ஆம் ஆண்டளவில் வெளிவாரிப் பட்டப்படிப்புகள் மற்றும் தொழில்சார் கற்றல் நிலையம் நிறுவப்பட்டதிலிருந்து இந்நிலையத்தின் ஊடாக இதுவரை ஏறத்தாழ 4000 பட்டதாரிகளும்
500க்கும் மேற்பட்ட டிப்ளோமாதாரர்களும் உருவாக்கப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தியே தனித்த கட்சி உருவாகக் காரணம் – காதர் மஸ்தான்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தி உள்ளிட்ட பல்வேறு காரணங்களே தனித்த அரசியல் கட்சியை உருவாக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தியதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர்…

123 0 0
இலங்கை செய்திகள்

ஹட்டன் நகரில் தொடர் கொள்ளை!

இன்று காலை (22) ஹட்டன் நகரில் உள்ள பின் சாலையில் அமைந்துள்ள 4 கடைகளில் திருடன் புகுந்துள்ளதாக ஹட்டன் காவல்துறை தெரிவித்துள்ளது. தங்கப் பொருட்கள் தயாரிக்கும் 3…

115 0 0
இலங்கை செய்திகள்

மல்வத்தை கோர விபத்து: தீவிர சிகிச்சை பெற்று வந்த மற்றைய இளைஞரும் உயி@ரிழப்பு!

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தைப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (20) மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் லொறி ஆகியன மோதிய கோர விபத்தில்…

127 0 0
இலங்கை செய்திகள்

நிந்தவூர் கடல் அனர்த்தம்: காணாமல் போன மற்றைய மாணவரின் சட@லமும் பொத்துவில் கோமாரி கடற்பரப்பில் மீட்பு 

அம்பாறை மாவட்டம், நிந்தவூர் கடற்கரையில் கடந்த வெள்ளிக்கிழமை (20) கடலில் நீராடச் சென்று அலையில் இழுத்துச் செல்லப்பட்டுக் காணாமல் போயிருந்த மற்றைய மாணவரின் சடலமும் நள்ளிரவு பொத்துவில்…

141 0 0