உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
22 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஒன்பது கடிதங்கள் அனுப்பியும் பதிலில்லை; பணிப்புறக்கணிப்பில் இறங்குவோம்.!

135 பார்வைகள்

மருத்துவர்களின் தொழில்சார் மற்றும் நிதிசார் பிரச்சினைகள் குறித்துப் பேச்சு நடத்துவதற்காக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சுகாதார அமைச்சர் ஆகியோருக்கு மொத்தமாக 9 கடிதங்கள் அனுப்பப்பட்ட போதிலும், அரசு இதுவரை எந்தவொரு சந்தர்ப்பத்தையும் வழங்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், தொடர்ந்தும் இழுத்தடிப்புச் செய்யப்பட்டால் தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளது.

தமது தீர்க்கப்படாத பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு நான்கு கடிதங்களும், பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு இரண்டு கடிதங்களும், சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுக்கு மூன்று கடிதங்களும் அனுப்பப்பட்டுள்ளன என்றும் அந்தச் சங்கம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் அனுப்பப்பட்ட கடிதங்களின் பிரதிகளையும் இணைத்து, ஊடகங்களுக்குப் புதிதாக வெளியிட்டுள்ள அறிக்கையில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“நிலுவையிலுள்ள பொது விடுமுறை மற்றும் மேலதிக கடமைக் கொடுப்பனவுகளை உடன் வழங்குதல், இடையூறு, தயார்நிலை மற்றும் போக்குவரத்துக் கொடுப்பனவில் திருத்தங்களை மேற்கொள்ளுதல், மருத்துவர்களைப் பாதிக்கும் வரி விதிப்பில் மாற்றங்களைச் செய்தல் மற்றும் சம்பளத் திருத்தங்களை மேற்கொள்ளுதல், பிரத்தியேகமான இலங்கை மருத்துவ சேவையை நிறுவுதல் மற்றும் தொழில்சார் முன்னேற்ற வாய்ப்புகளை மேம்படுத்துதல், ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பை வலுப்படுத்துதல் மற்றும் பொதுச் சுகாதாரத் துறையில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறைக்குத் தீர்வு காணுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியே நாம் இவ்வாறு பல சந்தர்ப்பங்களில் கடிதங்களை அனுப்பி வைத்திருக்கின்றோம்.

2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பான முன்மொழிவுகளையும் நாம் சமர்ப்பித்திருந்த போதிலும், அரசின் பதில் திருப்தியளிக்கவில்லை. ஒரு பொறுப்புள்ள நிர்வாகம் மோதல்களுக்குப் பதிலாகப் பேச்சு மற்றும் இணக்கப்பாட்டின் மூலமே தொழில்சார் பிணக்குகளுக்குத் தீர்வு காண வேண்டும். தொழிற்சங்க நடவடிக்கை என்பது எமது விருப்பத்துக்குரிய தெரிவல்ல.

ஆனால், அரசு தொடர்ந்தும் பேச்சுகளைத் தவிர்த்தால், தொழிற்சங்க நடவடிக்கையை நாடுவதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை. அத்துடன், பேச்சுகளில் ஈடுபடத் தவறுவதால் ஏற்படும் எந்தவொரு விளைவுகளுக்கும் அரசே பொறுப்பேற்க வேண்டும். மருத்துவத் துறையைப் பாதிக்கும் பொருளாதார அநீதிகளுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணையுமாறு அரச வைத்தியர்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம்.” – என்றுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தியே தனித்த கட்சி உருவாகக் காரணம் – காதர் மஸ்தான்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தி உள்ளிட்ட பல்வேறு காரணங்களே தனித்த அரசியல் கட்சியை உருவாக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தியதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர்…

124 0 0
இலங்கை செய்திகள்

ஹட்டன் நகரில் தொடர் கொள்ளை!

இன்று காலை (22) ஹட்டன் நகரில் உள்ள பின் சாலையில் அமைந்துள்ள 4 கடைகளில் திருடன் புகுந்துள்ளதாக ஹட்டன் காவல்துறை தெரிவித்துள்ளது. தங்கப் பொருட்கள் தயாரிக்கும் 3…

116 0 0
இலங்கை செய்திகள்

மல்வத்தை கோர விபத்து: தீவிர சிகிச்சை பெற்று வந்த மற்றைய இளைஞரும் உயி@ரிழப்பு!

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தைப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (20) மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் லொறி ஆகியன மோதிய கோர விபத்தில்…

128 0 0
இலங்கை செய்திகள்

நிந்தவூர் கடல் அனர்த்தம்: காணாமல் போன மற்றைய மாணவரின் சட@லமும் பொத்துவில் கோமாரி கடற்பரப்பில் மீட்பு 

அம்பாறை மாவட்டம், நிந்தவூர் கடற்கரையில் கடந்த வெள்ளிக்கிழமை (20) கடலில் நீராடச் சென்று அலையில் இழுத்துச் செல்லப்பட்டுக் காணாமல் போயிருந்த மற்றைய மாணவரின் சடலமும் நள்ளிரவு பொத்துவில்…

141 0 0