உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
28 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மன்னார், கொக்குத்தொடுவாய் போல் செம்மணியும் பூசி மெழுகப்படுகின்றதா?

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
67 பார்வைகள்

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரமானது மன்னார் மற்றும் கொக்குத்தொடுவாய் புதைகுழிகளைப் போன்று பூசி மெழுகப்பட்டு, கைவிடப்பட்ட ஒரு விவகாரமாக மாறிவிடுமோ என்ற ஆழமான அச்சம் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது என்று ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

எனவே, இந்த விவகாரம் சரியான திசையை நோக்கிப் பயணிக்க வேண்டுமெனில் சர்வதேச கண்காணிப்பு கட்டாயம் அவசியமானது என்றும் அவர் வலியுறுத்தினார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,
“ஏற்கனவே இந்தச் செம்மணி புதைகுழி விவகாரம் சம்பந்தமாக, இது சரியான பாதையில் முன்னெடுக்கப்படுமா? என்ற சந்தேகம் தமிழ் மக்கள் அனைவர் மத்தியிலும் இருக்கின்றது.

ஏனென்றால், மன்னார் புதைகுழி விவகாரமோ அல்லது முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் புதைகுழி விவகாரமோ – இப்படி அனைத்துப் புதைகுழி விவகாரங்களுமே இறுதியில் கைவிடப்பட்ட விடங்களாகவே போய்விட்டன.

இப்போது வந்துள்ள செம்மணிப் புதைகுழி அறிக்கையும் அதேபோன்று பூசி மெழுகப்படலாம் என்றே தோன்றுகின்றது. இந்த அரசும் முன்னர் இருந்த அரசுகள் கையாண்ட முறைகளையே பின்பற்றப் போகின்றது என்ற அச்சம் இந்த அறிக்கையின் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.” – என்றார்.

புலம்பெயர் தேசங்கள் மற்றும் உள்நாட்டில் நிலவும் சந்தேகங்கள் குறித்துத் தெரிவித்த அவர்,

“இங்கேயும் சரி, புலம்பெயர்ந்த தேசங்களிலும் சரி, தற்போதைய இந்த அறிக்கை செம்மணி விவகாரம் சரியான திசை நோக்கி நகராது என்ற கடுமையான அச்சத்தையே கொடுத்திருக்கின்றது.

ஆகவேதான் நாங்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறுகின்றோம், செம்மணிப் புதைகுழி விவகாரத்துக்குத் தெளிவான நீதி கிடைக்கவேண்டுமாயின், இதற்கு நிச்சயமாக சர்வதேசக் கண்காணிப்பு வேண்டும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடுகள் கட்டித் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி; இருவர் கைது.!

வீடுகள் கட்டித் தருவதாகக் கூறி 3 கோடியே 87 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் நிதியை மோசடி செய்ததாகக் கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களான ஆண் ஒருவரும்…

85 0 0
இலங்கை செய்திகள்

எயார்பஸ் வழக்கு; நாமலுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

எயார்பஸ் விமானக் கொள்வனவு கொடுக்கல் வாங்கல் நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவை எதிர்வரும் நவம்பர் மாதம்…

73 0 0
இலங்கை செய்திகள்

இளைஞர்களின் கருத்துக்களை நாடாளுமன்ற குழுக்களில் முன்வைக்க நடவடிக்கை.!

இளைஞர்களால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள், பிரச்சினைகள் மற்றும் கொள்கை முன்மொழிவுகளை நாடாளுமன்ற குழுக்களில் முன்வைப்பதுடன், இந்தச் செயற்பாட்டில் இளைஞர் பிரதிநிதிகளின் பங்கேற்பை உறுதிப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்றத்தின்…

76 0 0
இலங்கை செய்திகள்

த.வி.பு. மீதான தடையை கனடா உடனே நீக்கி ஏனைய நாடுகளுக்கும் வழிகாட்ட வேண்டும்.!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீது கனடா விதித்துள்ள தடையை நீக்குவதற்கான நடவடிக்கைகளை அந்நாடு முதலில் முன்னெடுத்து, ஏனைய உலக நாடுகளும் தமது தடைகளை நீக்குவதற்கு முன்னுதாரணமாகவும்…

78 0 0