உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
28 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

செம்மணிப் புதைகுழி விடயத்தில் சர்வதேச நிபுணத்துவம் அவசியம்.!

இலங்கை செய்திகள் 3 மணி நேரம் முன்
74 பார்வைகள்

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் சர்வதேச நிபுணர்களின் மேற்பார்வை அவசியமானது என்றும், பேராசிரியர் ராஜ் சோமதேவவினால் சமர்ப்பிக்கப்பட்ட மூன்றாவது இடைக்கால அறிக்கையில் முரண்பாடுகள் காணப்படுவதால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,
“பேராசிரியர் ராஜ் சோமதேவவினால் தயாரிக்கப்பட்ட செம்மணி தொடர்பான மூன்றாவது இடைக்கால அறிக்கையை நாங்கள் முழுமையாக ஆராய்ந்து, அதற்கான சட்ட ரீதியான மாற்றீட்டை முன்வைக்க வேண்டியுள்ளது.

இதற்கு முன்னர் அவர் சமர்ப்பித்த இரு அறிக்கைகளிலும் ‘மனிதப் புதைகுழி’ என்ற பதம் பயன்படுத்தப்பட்டிருந்ததுடன், அங்கு குற்றச்செயல்கள் நடைபெற்றமைக்கான சான்றுகள் மற்றும் தடயங்கள் இருப்பதாகவும் அவரே சுட்டிக்காட்டியிருந்தார்.

ஆனால், தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த மூன்றாவது இடைக்கால அறிக்கையில், அதற்கு மாறுபட்டதொரு கருத்தை அவர் தெரிவித்திருப்பதை அவதானிக்க முடிகின்றது. அதனை எம்மால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இது ஒரு தொல்லியல் நிபுணரால் தயாரிக்கப்பட்ட இடைக்கால அறிக்கை மட்டுமே. சர்வதேச மேற்பார்வை இன்றி முன்னெடுக்கப்படும் இவ்வாறான அகழ்வாராய்ச்சிகளில், ஒருவர் திடீரென இத்தகைய அறிக்கையைச் சமர்ப்பிப்பது உண்மைத் தன்மையையே சந்தேகத்துக்கு உள்ளாக்குவதுடன், பெரும் பாதிப்பையும் ஏற்படுத்துகின்றது.

எனவே, இந்த அகழ்வுப் பணிகள் மீண்டும் தொடரும்போது சர்வதேச நிபுணத்துவம் கட்டாயம் அங்கு இருக்க வேண்டும். தற்போது வெளியாகியுள்ள இந்த அறிக்கையானது சர்வதேச நிபுணத்துவத்தின் அவசியத்தை மேலும் வலியுறுத்துவதாகவே அமைந்துள்ளது.” – என்றார்.

அறிக்கையிலுள்ள முரண்பாடான கருத்துக்கள் தொடர்பாக வரும் நாட்களில் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்த சுமந்திரன்,

“நான் ஏற்கனவே இது தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகி பல முக்கிய விடயங்களை முன்வைத்துள்ளேன். அதன் தொடர்ச்சியாக, எதிர்வரும் நீதிமன்றத் தவணையின்போது இந்த அறிக்கை தொடர்பான எமது அவதானிப்புகளையும் ஆட்சேபனைகளையும் முறைப்படி நீதிமன்றத்தில் முன்வைக்க உத்தேசித்துள்ளேன்.” – என்று மேலும் கூறினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடுகள் கட்டித் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி; இருவர் கைது.!

வீடுகள் கட்டித் தருவதாகக் கூறி 3 கோடியே 87 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் நிதியை மோசடி செய்ததாகக் கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களான ஆண் ஒருவரும்…

85 0 0
இலங்கை செய்திகள்

எயார்பஸ் வழக்கு; நாமலுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

எயார்பஸ் விமானக் கொள்வனவு கொடுக்கல் வாங்கல் நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவை எதிர்வரும் நவம்பர் மாதம்…

73 0 0
இலங்கை செய்திகள்

இளைஞர்களின் கருத்துக்களை நாடாளுமன்ற குழுக்களில் முன்வைக்க நடவடிக்கை.!

இளைஞர்களால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள், பிரச்சினைகள் மற்றும் கொள்கை முன்மொழிவுகளை நாடாளுமன்ற குழுக்களில் முன்வைப்பதுடன், இந்தச் செயற்பாட்டில் இளைஞர் பிரதிநிதிகளின் பங்கேற்பை உறுதிப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்றத்தின்…

76 0 0
இலங்கை செய்திகள்

த.வி.பு. மீதான தடையை கனடா உடனே நீக்கி ஏனைய நாடுகளுக்கும் வழிகாட்ட வேண்டும்.!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீது கனடா விதித்துள்ள தடையை நீக்குவதற்கான நடவடிக்கைகளை அந்நாடு முதலில் முன்னெடுத்து, ஏனைய உலக நாடுகளும் தமது தடைகளை நீக்குவதற்கு முன்னுதாரணமாகவும்…

78 0 0