உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
9 வெள்ளி
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியில் இருந்து தனஞ்சய டி சில்வா விலகல்!

விளையாட்டுச் செய்திகள் 15 மணி நேரம் முன்
80 பார்வைகள்

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் தனஞ்சய டி சில்வா, அணித்தலைவர் பதவியில் இருந்து உடனடியாக விலகுவதாக அறிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அணித்தலைமை பொறுப்பை அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்க வேண்டிய நேரம் இது என கருதுவதாக, தெரிவுக்குழுவுக்கு அனுப்பிய கடிதத்தில் தனஞ்சய டி சில்வா தெரிவித்துள்ளார்.

எனினும், இலங்கை அணிக்காக வீரராக தொடர்ந்து விளையாட தான் தயாராக இருப்பதாகவும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

தனஞ்சய டி சில்வா டெஸ்ட் அணிக்கு வழங்கிய தலைமைத்துவத்திற்கு நன்றி தெரிவிப்பதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஷ்லி டி சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன், தனஞ்சய டி சில்வாவின் கிரிக்கெட் வாழ்க்கையின் எஞ்சிய காலத்திற்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

டெல்லி கப்பிட்டல்ஸ் அணியின் புதிய பயிற்சியாளராக சவுரவ் கங்குலி நியமனம்!

ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணி தலைவர் சவுரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லி அணியின் தலைமைப்…

72 0 0
விளையாட்டுச் செய்திகள்

2036 ஒலிம்பிக் போட்டியை நடத்தப்போவது யார்?

2036ஆம் ஆண்டுக்கான கோடைகால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான ஆரம்பக்கட்டப் போட்டியில் இந்தியா மற்றும் கட்டார் உள்ளிட்ட 7 நாடுகள் களமிறங்கியுள்ளதாக சர்வதேச ஒலிம்பிக் குழு உத்தியோகபூர்வமாக…

78 0 0
விளையாட்டுச் செய்திகள்

கண்ணீருடன் சர்வதேச கால்பந்தில் இருந்து விடை பெற்றார் மெஸ்ஸி

ஆர்ஜென்டினா கால்பந்து அணியின் ஜாம்பவான் லயனல் மெஸ்ஸி, கண்ணீருடன் சர்வதேச கால்பந்தில் இருந்து விடைபெற்றார். பெனின் அணிக்கு எதிரான நட்பு ரீதியிலான போட்டியே ஆர்ஜென்டினா அணிக்காக அவர்…

71 0 0
விளையாட்டுச் செய்திகள்

ஐசிசியின் செப்டம்பர் மாத சிறந்த வீராங்கனை விருதுக்கு சமரி அத்தபத்து பரிந்துரை!

சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) வெளியிட்டுள்ள செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீராங்கனை விருதுக்கு இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி சமரி அத்தபத்து பரிந்துரைக்கப்பட்டுள்ளார். கடந்த…

56 0 0