உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
16 புதன்

செட்டிகுளம் வைத்தியசாலைக்கு சத்தியலிங்கம் எம்.பி விஜயம்.!

இலங்கை செய்திகள் 4 மணி நேரம் முன்
32 பார்வைகள்

வவுனியாவின் செட்டிகுளம் வைத்தியசாலைக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் கடந்த 14.09.2026 அன்று களவிஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.

செட்டிகுளம் வைத்தியசாலை அபிவிருத்திக்குழுவின் அழைப்பின் பிரகாரம் வைத்தியசாலையில் காணப்படும் பிரச்சினைகள், தேவைப்பாடுகள் தொடர்பில் நேரில் ஆய்வு செய்யும் வகையில் இந்த விஜயம் இடம்பெற்றிருந்தது.

இதன்போது வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அத்தியட்சகர், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் ஆகியோரை சந்தித்து வைத்தியசாலையின் தேவைப்பாடுகள், எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.

பின்னர் வைத்தியசாலை வளாகத்தினையும், மருத்துவ விடுதிகளையும் பார்வையிட்டார்.

இதன்போது வைத்தியசாலை தரப்பினரால் முன்னிலைப்படுத்தப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் உரிய தரப்பினரின் கவனத்திற்கு கொண்டுசென்று தீர்வுகளை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இதன்போது தெரிவித்தார்.

இந்த விஜயத்தின்போது வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர், நாடாளுமன்ற உறுப்பினரின் செயலாளர் பாலச்சந்திரன் சிந்துஜன், செட்டிகுளம் பிரதேச இணைப்பாளர் ச.பத்மசீலன் ஆகியோரும் இணைந்திருந்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காட்டு யானைகளின் அச்சுறுத்தல்; வனஜீவிகள் அலுவலகம் அமைக்க திட்டம்.!

சம்மாந்துறை அலவக்கரை மற்றும் அதனை அண்டிய கிராமப் பகுதிகளில் பகல் வேளைகளில் வயல் வெளிகளில் நடமாடும் காட்டு யானைகள், இரவு நேரங்களில் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்து பொதுமக்களின்…

4 0 0
இலங்கை செய்திகள்

ஐஸ் போ*தைப்பொருளுடன் ஒருவர் கைது.!

மித்தெனிய, மகாக்கொட்டுவ பகுதியில் நேற்று செவ்வாய்கிழமை (15) ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளாதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 34 வயதுடைய மித்தெனிய…

41 0 0
இலங்கை செய்திகள்

வறுமையை ஒழிப்பதற்காக “பிரஜா சக்தி” திட்டம் உருவாக்கப்பட்டது.

கிராமிய அபிவிருத்தி, வறுமை ஒழிப்பு மற்றும் சமூகப் பங்களிப்பை அடிப்படையாகக் கொண்ட தென் கொரியாவின் மிக முக்கியமான அபிவிருத்தி இயக்கமான ‘செமாவூல் உந்தோங்’ (Saemaul Undong) பற்றிய…

40 0 0
இலங்கை செய்திகள்

காயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞன் உ*யிரிழப்பு.!

கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேதமுல்ல பகுதியில் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட 26 வயதுடைய இளைஞன் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். லிலீஸ் லேன் பகுதி, வேதமுல்ல தோட்டம்,…

35 0 0