உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்து; சாரதி தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
240 பார்வைகள்

வவுனியா, புளியங்குளம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்து தொடர்பில், குறித்த பிரபல பேருந்தின் உரிமையாளர் நேற்று (04) புளியங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜூலை 31 ஆம் திகதி புளியங்குளம் பகுதியில் உந்துருளி மீது பேருந்து மோதியதில், அதில் பயணித்த முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இவ்விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், விபத்தை ஏற்படுத்திய பேருந்தின் சாரதியைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சாரதியிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அவர் ‘ஐஸ்’ எனும் வீரியமிக்க போதைப்பொருளைப் பயன்படுத்தியிருந்தமை மருத்துவ ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டது.

தீவிர விசாரணைகளில், குறித்த நபரின் சாரதி அனுமதிப்பத்திரமும் ஏற்கனவே காலாவதியாகியிருந்த அதிர்ச்சித் தகவல் வெளிச்சத்திற்கு வந்தது.

இதனையடுத்து, காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரத்தைக் கொண்டிருந்த மற்றும் போதைப்பொருள் பயன்படுத்திய ஒருவருக்குப் பேருந்தைச் செலுத்த அனுமதி அளித்த குற்றச்சாட்டின் கீழ், அப்பேருந்தின் உரிமையாளரைப் பொலிஸார் கைது செய்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் புளியங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அடையாளம் காண உதவுமாறு பொது மக்களிடம் வேண்டுகோள்

சட@லத்தை அடையாளம் காண உதவுமாறு நுவரெலியா மாவட்ட பொலிஸார் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 06 ஆம் திகதியன்று இனம்…

82 0 0
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் அடக்கம் செய்யப்பட்ட பெண்ணின் சட@லம் மீண்டும் தோண்டி எடுப்பு!

மட்டக்களப்பு கிரான்குளம் 08, தர்மபுரம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட பெண்ணொருவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டது. 2026.07.12 ஆந் திகதி காத்தான்குடி, கிரான்குளம் கூட்டுறவுச் சந்தியில்,…

88 0 0
இலங்கை செய்திகள்

கல்முனையில் தற்கொ@லை செய்துகொண்ட மாணவனின் சட@லம் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட 19 வயதுடைய பாடசாலை மாணவனின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் இறுதிக்கிரிகைகளுக்காக உறவினர்களிடம் மாலை கையளிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனைத் தலைமையக…

69 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனைக் காப்பாற்ற அனைத்து வழிகளையும் பயன்படுத்துவோம் – அரசாங்கம் உறுதி!

சவுதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இலங்கை நாட்டவர் சிவராசா அனோஜனுக்கு உதவ இலங்கை அரசாங்கம் தனது சட்டரீதியான முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. தற்போது அங்குள்ள சட்டக் குழுவினர்…

75 0 0