• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, July 5, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

நீதித்துறைக்குள் அரசின் நேரடி அரசியல் தலையீடு.!

Mathavi by Mathavi
July 5, 2026
in இலங்கை செய்திகள்.
0
நீதித்துறைக்குள் அரசின் நேரடி அரசியல் தலையீடு.!
Share on FacebookShare on Twitter

உயர்நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதன் மூலம், தற்போதைய திசைகாட்டி அரசு நீதித்துறைக்குள் நேரடி அரசியல் தலையீடுகளை மேற்கொள்ள முயற்சிக்கின்றது என்று ஊழல் எதிர்ப்பு முன்னணியின் அழைப்பாளர் நிரோஷன் பாதுக்க கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் முதன்மைக் காரியாலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
“நமது நாட்டின் 1972 மற்றும் 1978ஆம் ஆண்டு அரசமைப்புகளின்படி, உயர்நீதிமன்ற நீதியரசர் ஒருவர் 65 வயதிலும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஒருவர் 63 வயதிலும் ஓய்வுபெற வேண்டும் எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், தற்போதைய அரசு இந்த ஓய்வுபெறும் வயதை மேலும் நீடிப்பதற்குத் திடீர் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்க்கட்சியில் இருந்தபோது இது குறித்து எந்தவொரு கருத்தையும் வெளியிட்டிருக்கவில்லை.

அரசமைப்பின் 20ஆவது திருத்தத்தின்படி, பிரதம நீதியரசர் உள்ளிட்ட உயர்நீதிமன்ற நீதியரசர்களின் எண்ணிக்கை 11 இலிருந்து 19 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் எண்ணிக்கை 12 இலிருந்து 20 ஆகவும் அதிகரிக்கப்பட்டது. ஆனால், கடந்த சில மாதங்களில் மட்டும் நீதித்துறை அமைப்பில் 8 நீதியரசர்கள் வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த வெற்றிடங்களுக்கான தகுதியான பெயர்களை ஜனாதிபதி இதுவரை அரசமைப்பு சபைக்குப் பரிந்துரைக்கவில்லை. இவ்வாறானதொரு பின்னணியில், நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கே ஜனாதிபதி தலைமையிலான அரசு முன்னுரிமை வழங்கி வருகின்றது.

எதிர்வரும் நவம்பர் மாதத்துடன் தற்போதைய பிரதம நீதியரசர் ஓய்வுபெற வேண்டும். ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதாயின், அது ஏன் உயர்நீதிமன்ற நீதியரசர்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட வேண்டும்? நாட்டின் நீதிவான் நீதிமன்ற நீதிவான்கள், மேல் நீதிமன்ற நீதிபதிகள், மருத்துவர்கள் மற்றும் அரச சேவையின் ஏனைய உயர் அதிகாரிகளின் ஓய்வுபெறும் வயதும் அதிகரிக்கப்பட வேண்டும் அல்லவா?

அரசின் ‘பொற்கால நாடொன்று – அழகான வாழ்க்கையொன்று’ கொள்கைப் பிரகடனத்தில், புதிய அரசமைப்பொன்று கொண்டுவரப்படும் எனக் கூறப்பட்டு, அதன்கீழ் 16 பிரதான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஆனால், அதில் பிரதம நீதியரசரின் பதவிக்காலத்தை அல்லது வயதை நீடிப்பது குறித்து எங்கும் குறிப்பிடப்படவில்லை. இலங்கையின் வரலாற்றில் இதற்கு முன்னர் இருந்த எந்தவொரு ஜனாதிபதியும் பிரதம நீதியரசரின் பதவிக்காலத்தை நீடிப்பதற்குத் தன்னிச்சையாக நடவடிக்கை எடுத்ததில்லை. நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படும் என இவர்களது கொள்கைப் பிரகடனத்தில் உறுதியளிக்கப்பட்டிருந்த போதிலும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அதனைச் செய்யாமல் தட்டிக் கழித்து வருகின்றார்.

பிரதம நீதியரசர் ஓய்வுபெறுவதால் நாட்டின் நீதித்துறை கட்டமைப்பு ஒருபோதும் வீழ்ச்சியடைந்துவிடாது. ஆனால் அவரது பதவிக்காலத்தை அரசியல் தேவைகளுக்காக நீடிப்பது நீதித்துறையின் சுயாதீனத்தன்மைக்குக் கடுமையான மற்றும் நேரடிப் பாதிப்பை ஏற்படுத்தும். தற்போது நீதித்துறை முறைமையானது அரசியல்மயப்படுத்தப்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. பிரதம நீதியரசரின் பதவிக்காலத்தை நீடிக்க வேண்டிய தேவை நாட்டு மக்களுக்கு இல்லை, அது தற்போதைய அரசுக்கே உள்ளது.

அரசின் கொள்கைப் பிரகடனத்தில் உள்ள விடயங்களைச் செயல்படுத்துவதற்காகவே மக்கள் இந்த அரசுக்குப் பெரும்பான்மை பலத்தை வழங்கினார்களே தவிர, அரசமைப்பைத் திருத்தி நீதித்துறைக்கு அழுத்தம் கொடுப்பதற்காக அல்ல. எனவே, ஜனாதிபதியும் அரசும் நீதித்துறையின் சுயாதீனத்தன்மைக்கு விடுக்கும் இந்த சவால்களுக்கு எதிராக, ஐக்கிய மக்கள் சக்தியும் அதன் சட்டத்தரணிகள் சங்கமும் இணைந்து சட்ட ரீதியான மற்றும் அரசியல் ரீதியான அனைத்துப் போராட்டங்களையும் நாடெங்கிலும் முன்னெடுக்கும்.” – என்றார்.

Related Posts

பலாலியில் 3ஆவது வாரமாகவும் போராட்டம் முன்னெடுப்பு.!

பலாலியில் 3ஆவது வாரமாகவும் போராட்டம் முன்னெடுப்பு.!

by Mathavi
July 5, 2026
0

பலாலி உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் உள்ள தங்களது பூர்வீகத் தனியார் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் மூன்றாவது வாரமாகவும் இன்று ஞாயிற்றுக்கிழமை வீதியில் இறங்கிப் பாரிய...

நீர்கொழும்பு சிறைக்குள் பயங்கர மோதல்; இரு கைதிகள் உயிரிழப்பு.!

நீர்கொழும்பு சிறைக்குள் பயங்கர மோதல்; இரு கைதிகள் உயிரிழப்பு.!

by Mathavi
July 5, 2026
0

நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் இருதரப்பினரிடையே இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் ஏற்பட்ட பயங்கர வன்முறை மோதலில் இரு கைதிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இன்று மதியம் சிறைச்சாலை...

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி; பெண் ஒருவர் கைது.!

போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது.!

by Mathavi
July 5, 2026
0

எப்பாவல மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல பிரதேசங்களில் நீண்டகாலமாக சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்த "தோணி" என்ற மாற்றுப்பெயரைக் கொண்ட பெண் ஒருவர்...

கேப்பாப்பிலவில் போராட்டம்; இராணுவ முகாம் வாயிலை முற்றுகையிட்ட மக்கள்.!

கேப்பாப்பிலவில் போராட்டம்; இராணுவ முகாம் வாயிலை முற்றுகையிட்ட மக்கள்.!

by Mathavi
July 5, 2026
0

இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது பூர்வீகக் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி முல்லைத்தீவு - கேப்பாப்பிலவு மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டம் இன்று 12 ஆவது நாளை...

அனைத்து உரிமைகளையும் பாதுகாக்கும் புதிய பயணத்தில் ஒன்றிணையுங்கள்.!

அனைத்து உரிமைகளையும் பாதுகாக்கும் புதிய பயணத்தில் ஒன்றிணையுங்கள்.!

by Mathavi
July 5, 2026
0

கட்சி, இனம், மத பாகுபாடுகளின்றி சகல மக்களினதும் உரிமைகளைப் பாதுகாக்கும் முற்போக்கான புதிய பயணத்தில் தங்களோடு இணைந்து கொள்ளுமாறு சிவில் சமூக அமைப்புகள் மற்றும் செயற்பாட்டாளர்கள் அனைவருக்கும்...

தேர்தல் வைத்தால் பலத்த அடி விழும்; அரசுக்கு நாமல் எச்சரிக்கை.!

தேர்தல் வைத்தால் பலத்த அடி விழும்; அரசுக்கு நாமல் எச்சரிக்கை.!

by Mathavi
July 5, 2026
0

நாட்டுக்காக உயிரைத் தியாகம் செய்து இராணுவ வீரர்கள் பெற்ற வெற்றிகளையும் அவர்களின் கௌரவத்தையும் தற்போதைய 'திசைகாட்டி' அரசு திட்டமிட்டுச் சிறுமைப்படுத்தி வருகின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...

தந்தையுடன் பாண் வாங்கச் சென்ற சிறுவனுக்கு நேர்ந்த துயரம்.!

தந்தையுடன் பாண் வாங்கச் சென்ற சிறுவனுக்கு நேர்ந்த துயரம்.!

by Mathavi
July 5, 2026
0

மாத்தறை மாவட்டம், பஸ்கொடை பிரதேசத்தில் உள்ள வீதியால் தந்தையுடன் நடந்து சென்ற 9 வயதுச் சிறுவன் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான். இந்தக்...

யாழில் வாள்வெட்டுத் தாக்குதல்; மூவர் படுகாயம்.!

யாழில் வாள்வெட்டுத் தாக்குதல்; மூவர் படுகாயம்.!

by Mathavi
July 5, 2026
0

யாழ்ப்பாணம், நாவாந்துறை பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமுக்கு மிக அருகில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் ஒன்று நடத்திய துணிகர வாள்வெட்டுத் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச்...

சிறைக்குள் மோதல்; கைதிகள் பலர் காயம்.!

சிறைக்குள் மோதல்; கைதிகள் பலர் காயம்.!

by Mathavi
July 5, 2026
0

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 20 பேர் காயமடைந்துள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமை (5) கைதிகளின் இரண்டு குழுக்கள் இடையில் மோதல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில்...

வளர்ப்பு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு.!

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொ*லை.!

by Mathavi
July 5, 2026
0

கடவத்த, இஹல பியன்வில பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் கடவத்த பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. குறித்த...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி