• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, July 5, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

வளமான நாடு எனக் கூறி நீதிமன்ற சுயாதீனத்தை அழிக்கின்றது அநுர அரசு.!

Mathavi by Mathavi
July 5, 2026
in இலங்கை செய்திகள்.
0
வளமான நாடு எனக் கூறி நீதிமன்ற சுயாதீனத்தை அழிக்கின்றது அநுர அரசு.!
Share on FacebookShare on Twitter

வளமான நாடும் அழகான வாழ்க்கையும் அமைத்துத் தருவோம் எனக் கூறி அதிகாரத்துக்கு வந்த ‘திசைகாட்டி’ (தேசிய மக்கள் சக்தி) அரசு, இன்று நீதிமன்றத்தின் சுயாதீனத்தை அழித்துக் கொண்டிருக்கின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரிக் கேட்போர் கூடத்தில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தால் நேற்று சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது தொடர்பான பொதுமக்கள் கலந்துரையாடலில் பங்கேற்ற பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,
“ஒரு நாட்டின் ஜனநாயகத்தின் அடிப்படைத் தூண்களான சட்டவாக்கம், நிறைவேற்றுத்துறை, நீதித்துறை ஆகியவற்றுடன் சுதந்திர ஊடகங்கள் மற்றும் சிவில் சமூகச் செயற்பாடுகளின் ஊடாக ஜனநாயகத்தைப் பாதுகாப்பது அனைவரினதும் பொறுப்பாகும்.

தற்போது அரசு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை 63 லிருந்து 65 ஆகவும், உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை 65 லிருந்து 67 ஆகவும் அதிகரிக்க முயற்சித்து வருகின்றது. எனினும், இந்த இரு உயர் நீதிமன்றங்களிலும் தலா 8 நீதியரசர்கள் நியமிக்கப்படாமல் வெற்றிடங்கள் காணப்படுகின்றன. இவ்வாறான திடீர் அரசமைப்புத் திருத்தங்கள் ஜனநாயக முறைமைக்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் கொடுக்கப்படும் மரண அடியாகும். இதன் மூலம் நீதிமன்றத்தின் சுயாதீனத்துக்கு சவால் விடுக்கப்படுவதுடன், அதன் நம்பகத்தன்மை குறித்தும் பல சந்தேகங்கள் எழுகின்றன.

20 ஆவது அரசமைப்புத் திருத்தத்தின் ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் எண்ணிக்கை 12 லிருந்து 20 ஆகவும், உயர் நீதிமன்ற நீதியரசர்களின் எண்ணிக்கை 11 லிருந்து 17 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தேவைப்பாடுகள் நிலவினால் நீதியரசர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். ஏனெனில், அது நீதிமன்றத்துக்கான வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதாக அமையும். ஆனால், இவ்வாறான தன்னிச்சையான முறையில் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது நீதிமன்றத்தின் நற்பெயரையும் அதன் பிம்பத்தையும் கெடுக்கும் செயலாகும்.

கொழும்பு சட்ட சங்கம், சட்டத்தரணிகள் சங்கம், கொழும்பு மேன் நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கம், பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட பல அமைப்புகள், இந்த வயதெல்லை அதிகரிப்பால் ஏற்படும் பாதகமான நிலைமைகளைச் சுட்டிக்காட்டியுள்ளன. ‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ என்ற மக்கள் ஆணையை மீறி சர்வாதிகாரப் போக்கை நோக்கிச் செல்ல வேண்டாம் என நான் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கின்றேன்.

எமது நாட்டுக்குத் தேவை ஜனநாயகமே அன்றி சர்வாதிகாரம் அல்ல. எனவே, இனம், மதம், சாதி, வர்க்க, கட்சி பேதங்கள் இன்றி, ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும், நீதிமன்றத்தின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தவும் ஐக்கிய மக்கள் சக்தி எப்போதுமே முன்னிற்கும்.” – என்றார்.

Related Posts

கடும் மழை காரணமாக ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் மண்சரிவு.!

கடும் மழை காரணமாக ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் மண்சரிவு.!

by Mathavi
July 5, 2026
0

நுவரெலியா மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால் ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் குடாகம பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. வீதி...

நகுலேஸ்வரத்தில் 4 கிலோ வெள்ளி திருட்டு; இருவர் கைது.!

நகுலேஸ்வரத்தில் 4 கிலோ வெள்ளி திருட்டு; இருவர் கைது.!

by Mathavi
July 5, 2026
0

நேற்று இரவு கீரிமலை - நகுலேஸ்வரத்தில் 4 கிலோ வெள்ளி களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில் இருவரை...

கோர விபத்தில் இருவர் உயிரிழப்பு.!

கோர விபத்தில் இருவர் உயிரிழப்பு.!

by Mathavi
July 5, 2026
0

மொனராகலை மாவட்டம், தனமல்வில - உடவளவ வீதியின் போடகம பகுதியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதிவேகமாக வந்த...

சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக் கொ*லை; பிரதான சந்தேகநபர் கைது.!

சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக் கொ*லை; பிரதான சந்தேகநபர் கைது.!

by Mathavi
July 5, 2026
0

கொழும்பு - அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 23 வயதுடைய பிரதான பாதாள உலகக் கும்பல் சந்தேகநபர் மாலைதீவிலிருந்து நாடு...

சென்னையில் கஜேந்திரகுமார் குழுவினர் கம்யூனிஸ்ட் கட்சியுடனும் முக்கிய பேச்சு.!

சென்னையில் கஜேந்திரகுமார் குழுவினர் கம்யூனிஸ்ட் கட்சியுடனும் முக்கிய பேச்சு.!

by Mathavi
July 5, 2026
0

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் ஈழத் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் மற்றும் வாழ்வாதார உரிமைகள் தொடர்பில் தமிழ்த் தேசியப் பேரவையினர் முக்கிய கலந்துரையாடலொன்றை மேற்கொண்டுள்ளனர். சென்னை...

மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமில்லை.!

மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமில்லை.!

by Mathavi
July 5, 2026
0

மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமில்லை. இவர்கள் வெளிப்படையாகச் சொல்லி வெளிவரலாம். போலிக் குற்றம், பொய்க் குற்றச்சாட்டு, ஜனாதிபதியைப் பற்றிய விமர்சனமெல்லாம் ஒரு அறிவுபூர்வமான, அர்த்தமுள்ள விமர்சனம்...

கோர விபத்தில் குடும்பப் பெண் உயிரிழப்பு.!

கணவனின் தாக்குதலில் இளம் குடும்பப் பெண் உயிரிழப்பு.!

by Mathavi
July 5, 2026
0

பொலன்னறுவை மாவட்டம், அரலகங்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிம்பொகுண பகுதியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற குடும்பத் தகராறொன்றின் போது, கணவனால் தாக்கப்பட்ட இளம் குடும்பப் பெண்...

டெங்கு தீவிரம்; 39 பேர் உயிரிழப்பு.!

டெங்கு தீவிரம்; 39 பேர் உயிரிழப்பு.!

by Mathavi
July 5, 2026
0

இலங்கையில் இந்த ஆண்டில் டெங்குக் காய்ச்சலின் பரவல் கணிசமாக அதிகரித்து வருகின்றது என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு விடுத்துள்ள புதிய புள்ளிவிவரங்கள் எச்சரித்துள்ளன. நேற்று நள்ளிரவு...

தமிழக தலைவர்களுடனான சந்திப்பு சுயலாப அரசியலின் வெளிப்பாடு – டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

தமிழக தலைவர்களுடனான சந்திப்பு சுயலாப அரசியலின் வெளிப்பாடு – டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

by selvan
July 4, 2026
0

தென்னிலங்கையில் ஆட்சிக்கு வருகின்ற யாருமே தங்க தாம்பாழ தட்டில் வைத்து தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை தரமாட்டார்கள் என்று தெரிவித்துள்ள டக்ளஸ் தேவானந்தா, எமது அரசியல் உரிமைகளை...

மன்னாரில் திருடப்பட்டு முச்சக்கர வண்டியில் கடத்திச் செல்லப்பட்ட இரண்டு மாடுகள் மீட்பு!

மன்னாரில் திருடப்பட்டு முச்சக்கர வண்டியில் கடத்திச் செல்லப்பட்ட இரண்டு மாடுகள் மீட்பு!

by selvan
July 4, 2026
0

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னார் தாராபுரம் பிரதான வீதி பகுதியில் வைத்து முச்சக்கர வண்டியில் சட்ட விரோதமான முறையில் கொண்டு கொண்டு செல்லப்பட்ட இரண்டு மாடுகளை மன்னார்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி