• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, July 5, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமில்லை.!

Mathavi by Mathavi
July 5, 2026
in இலங்கை செய்திகள்., மட்டக்களப்பு செய்திகள்
0
மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமில்லை.!
Share on FacebookShare on Twitter

மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமில்லை. இவர்கள் வெளிப்படையாகச் சொல்லி வெளிவரலாம். போலிக் குற்றம், பொய்க் குற்றச்சாட்டு, ஜனாதிபதியைப் பற்றிய விமர்சனமெல்லாம் ஒரு அறிவுபூர்வமான, அர்த்தமுள்ள விமர்சனம் போன்று தெரியவில்லை. உணர்ச்சிவசப்பட்டு, ஆதரவாளர்களை முறுக்கேற்றுவதற்கு அல்லது தான் சிறையில் பிடிபட்டாலும் கூட எனது சீற்றம் குறையவில்லை என்பதைக் கூறக்கூடிய விதத்தில் சிலர் செயற்படுகின்றனர் என மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.

இப்போது விசாரணையை மேற்கொண்டு இருக்கின்ற சாணி அபேசேகர என்பவர் கடந்த காலத்திலும் கூட நேர்மையாக விசாரணைகளை மேற்கொண்டதாக அறியப்படுகின்றது. அதன் பின்னர் கோட்டாபய ஆட்சிக் காலத்தில் அவரை கைது செய்து உள்ளே தள்ளியிருந்தார்கள் இப்போது அவர், பல உண்மைகளை வெளிக்கொணர்ந்து கொண்டிருக்கின்றார் எனவும் தெரிவித்தார்.

செம்மணியில் தற்போது 400-க்கும் மேற்பட்ட என்புக் கூடுகள் வெளியில் வந்திருக்கின்றது. 30 வருடங்களாக ஐந்து ஜனாதிபதிகள் மூடி மறைத்த அந்த உண்மைகள் வெளியில் வந்திருக்கின்றது. ஆகவே, இதனை வரவேற்கின்றோம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“உண்மையில் இந்த விடயம் தொடர்பான நீதிமன்ற விசாரணையின் போது உண்மைகள் கட்டாயம் வெளிவரும். கடந்த காலத்தில் குற்றவாளிகளை பாதுகாக்கின்ற ஒரு செயல்பாடுகள் காணப்பட்டன.

எங்களுடைய மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் உங்களுக்குத் தெரியும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள், ஊடகவியலாளர் கொல்லப்பட்டிருக்கின்றார்கள், சமூக செயல்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கொல்லப்பட்டிருக்கின்றார்கள்.

இந்த வேளையில் ராஜபக்ச அரசாங்கம் இருந்தது. கிட்டத்தட்ட அவருடைய ஆட்சிக் காலத்தில் 43-க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். அந்த வேளையில் பிள்ளையான் அவர்களும் அவர்களோடு சேர்ந்து செயல்பட்ட ஒருவராக இருக்கின்றார்.

கடந்த காலத்திலும் ஜோசப் பரராஜசிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களுடைய கொலை சம்பந்தமான விசாரணை நடைபெற்றது. ஆட்சி மாற்றத்தின் போது அவர் வெளியில் வந்திருக்கின்றார். மீண்டும் பல குற்றச்செயல்கள் அவர் தலையில் சுமத்தப்பட்டிருக்கின்றது. குறிப்பாகச் சொல்லப் போனால், அவரோடு இருந்த சகாக்கள் கூட இவர் மீது குற்றங்களைச் சுமத்துகின்ற அரசு சாட்சியங்களாகவும் மாறியிருக்கின்றார்கள்.

எனவே, இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. ஈஸ்டர் தாக்குதல் பற்றிய குற்றச்சாட்டு இருக்கின்றன. ஆகவே, இந்த குற்றச்சாட்டுகளுக்கு அவரும் பொறுப்பு என்ற கருத்து பரவலாகப் பேசப்படுகின்றது. இது குற்றப்புலனாய்வு விசாரணைகளின் போது பேசப்படுகின்றது, ஊடகங்களில் பேசப்படுகின்றது, சமூக செயல்பாட்டாளர்கள் கூட இதைச் சொல்லுகின்றார்கள்.

ஆகவே, தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு போலியானது பொய்யானது என்பதை நீதிமன்றங்கள் நிச்சயமாக உறுதி செய்யும். அந்த நீதிமன்றத்தின் மூலமாக எது பொய், எது போலியானது என்பது வெளிவரும். ஏனென்றால், இப்போது விசாரணையை மேற்கொண்டு இருக்கின்ற சாணி அபேசேகர என்பவர் உண்மையில் கடந்த காலத்திலும் கூட நேர்மையாக விசாரணைகளை மேற்கொண்டதாக அறியப்படுகின்றது. அவரை கோட்டாபய ஆட்சிக் காலத்தில் கைது செய்து உள்ளே தள்ளியிருந்தார்கள்.

இப்போது அவர், பல உண்மைகளை வெளிக்கொணர்ந்து கொண்டிருக்கின்றார். இது பொய்யல்ல, போலியல்ல. ஆகவே, இந்த விடயங்கள் உண்மையாக வந்து கொண்டிருக்கின்றன. எங்களுக்கும், நாங்கள் இந்த மண்ணில் வாழ்ந்தவர்கள் என்ற அடிப்படையில் கடந்த காலத்தில் இந்த கொலைகள், கடத்தல்கள், கப்பங்கள், பணம் பறித்தல் போன்ற செயல்பாடுகள் நடக்கும் போது யார் யார் இந்த ஆயுதங்களோடு செயல்பட்டார்கள், எங்கெங்கு முகாம் வைத்திருந்தார்கள் என்ற விடயமெல்லாம் தெரியும்.

ரவீந்திரநாத் பேராசிரியர், கல்வியலாளர் தம்பையா, அருட்தந்தையர், குருக்கள்மார் கொல்லப்பட்டிருக்கின்றார்கள்.

இந்த காலத்துல ஆயுதங்களை ஏந்திக்கொண்டு அட்டகாசமாக தீவுச்சனையிலும் கூட முகாமை வைத்துக் கொண்டு செயல்பட்டவர்கள் யார் என்பது இப்போது புலன் விசாரணையின் போது வந்து கொண்டிருக்கின்றது.

எனவே, பிள்ளையான் குற்றவாளி இல்லை நிரபராதி என்றால், நிரபராதி என்றால் அவர் விசாரணைக்கு முகம் கொடுத்து தப்பித்து வரலாம்.

அதேபோல சுரேஷ் சலே இருக்கின்றார். அவரும் வாக்குமூலம் கொடுக்காமல் உண்ணாவிரதம் இருக்கின்றார். மடிக்கணினியில் காணப்படுகின்ற அந்த பாஸ்வேர்ட், தொலைபேசியின் பாஸ்வேர்ட் போன்றவற்றை அவர் கொடுக்கவில்லை.

ஆகவே, குற்றம் செய்யவில்லை என்றால், மடியில் கனமில்லை என்றால், வழியில் பயமில்லை. இவர்கள் வெளிப்படையாகச் சொல்லி வெளிவரலாம். ஆகவே, போலிக் குற்றம், பொய்க் குற்றச்சாட்டு, ஜனாதிபதியைப் பற்றிய விமர்சனமெல்லாம் ஒரு அறிவுபூர்வமான, அர்த்தமுள்ள விமர்சனம் போன்று தெரியவில்லை. உணர்ச்சிவசப்பட்டு, ஆதரவாளர்களை முறுக்கேற்றுவதற்கு அல்லது தான் சிறையில் பிடிபட்டாலும் கூட எனது சீற்றம் குறையவில்லை என்பதைக் கூறக்கூடிய விதத்தில் அவர் செயல்படுகின்றார்.

எங்களைப் பொறுத்தமட்டில் நீதி விசாரணை வருகின்ற போது உண்மைகள் வெளிவரும். அதன் போது இது போலியா, உண்மையா என்பதை நாங்கள் புரிந்து கொள்வோம். ஆனால், எங்களுக்கும் மனச்சாட்சி இருக்கின்றது. நாங்களும் இதனை அறிந்து கொள்கின்றோம், உண்மைகள் எங்களுக்கு ஓரளவு விளங்குகின்றது.”

இப்போது செம்மணி புதைகுழி அகழப்படுகின்றது. 600-க்கும் மேற்பட்டவர்கள் புதைக்கப்பட்டவர்கள் என்று சோமரத்ன ராஜபக்ச சொல்லியிருந்தார். இப்போது பார்த்தால் 400-க்கும் மேற்பட்ட என்புக் கூடுகள் வந்திருக்கின்றது. ஆகவே, இந்த கொலையோடு சம்பந்தப்பட்ட சோமரத்ன ராஜபக்ச சொன்ன விடயம், 30 வருடங்களின் பின்னர் இப்போது நிஜமாகிக் கொண்டிருக்கின்றது.

எனவே, இந்த விசாரணையிலே எங்களுக்கு ஓரளவுக்கு உண்மை வெளியில் வந்திருக்கின்றது. ஆனால், இந்த உண்மை வெளிவந்தால் மட்டும் போதாது, கொல்லப்பட்டவர்கள் யார் என்பது மரபணு சோதனையின் மூலமாக கண்டுபிடிக்கப்பட வேண்டும். அதேபோல கொலை செய்தவர்கள் யார் என்பதும் கண்டுபிடிக்கப்பட வேண்டும், அவர்களுக்குரிய தண்டனைகள் வழங்கப்பட வேண்டும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்க வேண்டும். இவையெல்லாம் செய்தால்தான் நாங்கள் முழுமையாக நம்பிக்கை அடையலாம்.

ஆனால், தற்போது 400-க்கும் மேற்பட்ட என்புக் கூடுகள் வெளியில் வந்திருக்கின்றது. 30 வருடங்களாக ஐந்து ஜனாதிபதிகள் மூடி மறைத்த அந்த உண்மைகள் வெளியில் வந்திருக்கின்றது. ஆகவே, இதனை வரவேற்கின்றோம்.

ஆனால், இன்னும் உங்களுடைய முன்னேற்றமான செயல்பாட்டை எதிர்பார்க்கின்றோம்.

கொல்லப்பட்டவர்கள் யார், யார் கொன்றார்கள், அவர்களுக்கான நீதி என்ன, அவர்களுக்குரிய நியாயமான இழப்பீடு என்ன, மீள நிகழாமல் இருப்பதற்குரிய அரசியல் தீர்வு என்ன என்பதைப் பற்றி எல்லாம் கூறினால் தான் நாங்கள் முழுமையான நம்பிக்கை கொள்வோம்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமான விடயத்தில், அந்த ‘பப்பா’ என்று சொல்லப்படுகின்ற சூத்திரதாரி, மற்றது ‘சொனிக்’ என்று சொல்லப்படுகின்ற சூத்திரதாரி கைது செய்யப்பட்டு உள்ளுக்கு இருக்கின்றார்.

இப்போது, இன்னொருவர் ‘அல்பா’ என்று சொல்லப்படுகின்ற பெரிய குற்றவாளி இருக்கின்றார், அவரும் கைது செய்யப்பட இருப்பதாக அறிகின்றோம். அவருக்கு பயணத்தடை விதித்திருப்பதாக அறிகின்றோம். அவரும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டால்தான் இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையை கண்டறிய முடியும்.

ஆகவே, இந்த கடந்த அரசாங்கங்களோடு ஒப்பிடுகின்ற போது, ஓரளவுக்கு இந்த அரசாங்கம் இந்த விசாரணைகளில் முன்னேற்றத்தைக் காட்டினாலும், அவர்களுக்கு பௌத்த சிங்கள மேலாதிக்க குருமார்களின் அழுத்தங்கள் இருக்கின்ற படியால், இவர்கள் எந்த அளவுக்கு இந்த உண்மைகளைக் கண்டறிவார்கள் என்பது தெரியவில்லை. இதனால் தான் நாங்கள் சர்வதேச விசாரணையைக் கோருகின்றோம்.”

Related Posts

வளமான நாடு எனக் கூறி நீதிமன்ற சுயாதீனத்தை அழிக்கின்றது அநுர அரசு.!

வளமான நாடு எனக் கூறி நீதிமன்ற சுயாதீனத்தை அழிக்கின்றது அநுர அரசு.!

by Mathavi
July 5, 2026
0

வளமான நாடும் அழகான வாழ்க்கையும் அமைத்துத் தருவோம் எனக் கூறி அதிகாரத்துக்கு வந்த 'திசைகாட்டி' (தேசிய மக்கள் சக்தி) அரசு, இன்று நீதிமன்றத்தின் சுயாதீனத்தை அழித்துக் கொண்டிருக்கின்றது...

நகுலேஸ்வரத்தில் 4 கிலோ வெள்ளி திருட்டு; இருவர் கைது.!

நகுலேஸ்வரத்தில் 4 கிலோ வெள்ளி திருட்டு; இருவர் கைது.!

by Mathavi
July 5, 2026
0

நேற்று இரவு கீரிமலை - நகுலேஸ்வரத்தில் 4 கிலோ வெள்ளி களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில் இருவரை...

கோர விபத்தில் இருவர் உயிரிழப்பு.!

கோர விபத்தில் இருவர் உயிரிழப்பு.!

by Mathavi
July 5, 2026
0

மொனராகலை மாவட்டம், தனமல்வில - உடவளவ வீதியின் போடகம பகுதியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதிவேகமாக வந்த...

சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக் கொ*லை; பிரதான சந்தேகநபர் கைது.!

சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக் கொ*லை; பிரதான சந்தேகநபர் கைது.!

by Mathavi
July 5, 2026
0

கொழும்பு - அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 23 வயதுடைய பிரதான பாதாள உலகக் கும்பல் சந்தேகநபர் மாலைதீவிலிருந்து நாடு...

சென்னையில் கஜேந்திரகுமார் குழுவினர் கம்யூனிஸ்ட் கட்சியுடனும் முக்கிய பேச்சு.!

சென்னையில் கஜேந்திரகுமார் குழுவினர் கம்யூனிஸ்ட் கட்சியுடனும் முக்கிய பேச்சு.!

by Mathavi
July 5, 2026
0

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் ஈழத் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் மற்றும் வாழ்வாதார உரிமைகள் தொடர்பில் தமிழ்த் தேசியப் பேரவையினர் முக்கிய கலந்துரையாடலொன்றை மேற்கொண்டுள்ளனர். சென்னை...

கோர விபத்தில் குடும்பப் பெண் உயிரிழப்பு.!

கணவனின் தாக்குதலில் இளம் குடும்பப் பெண் உயிரிழப்பு.!

by Mathavi
July 5, 2026
0

பொலன்னறுவை மாவட்டம், அரலகங்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிம்பொகுண பகுதியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற குடும்பத் தகராறொன்றின் போது, கணவனால் தாக்கப்பட்ட இளம் குடும்பப் பெண்...

டெங்கு தீவிரம்; 39 பேர் உயிரிழப்பு.!

டெங்கு தீவிரம்; 39 பேர் உயிரிழப்பு.!

by Mathavi
July 5, 2026
0

இலங்கையில் இந்த ஆண்டில் டெங்குக் காய்ச்சலின் பரவல் கணிசமாக அதிகரித்து வருகின்றது என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு விடுத்துள்ள புதிய புள்ளிவிவரங்கள் எச்சரித்துள்ளன. நேற்று நள்ளிரவு...

தமிழக தலைவர்களுடனான சந்திப்பு சுயலாப அரசியலின் வெளிப்பாடு – டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

தமிழக தலைவர்களுடனான சந்திப்பு சுயலாப அரசியலின் வெளிப்பாடு – டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

by selvan
July 4, 2026
0

தென்னிலங்கையில் ஆட்சிக்கு வருகின்ற யாருமே தங்க தாம்பாழ தட்டில் வைத்து தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை தரமாட்டார்கள் என்று தெரிவித்துள்ள டக்ளஸ் தேவானந்தா, எமது அரசியல் உரிமைகளை...

மன்னாரில் திருடப்பட்டு முச்சக்கர வண்டியில் கடத்திச் செல்லப்பட்ட இரண்டு மாடுகள் மீட்பு!

மன்னாரில் திருடப்பட்டு முச்சக்கர வண்டியில் கடத்திச் செல்லப்பட்ட இரண்டு மாடுகள் மீட்பு!

by selvan
July 4, 2026
0

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னார் தாராபுரம் பிரதான வீதி பகுதியில் வைத்து முச்சக்கர வண்டியில் சட்ட விரோதமான முறையில் கொண்டு கொண்டு செல்லப்பட்ட இரண்டு மாடுகளை மன்னார்...

நுவரெலியாவில் இருந்து கதிர்காமம் நோக்கிய புனித யாத்திரை இன்று ஆரம்பம்!

நுவரெலியாவில் இருந்து கதிர்காமம் நோக்கிய புனித யாத்திரை இன்று ஆரம்பம்!

by selvan
July 4, 2026
0

மஸ்கெலியா ஸ்ரீ சண்முகநாத சுவாமி ஆலயத்தில் இருந்து கதிர்காமம் நோக்கி செல்லும் பாதை யாத்திரை இன்று 04 ம் திகதி திரு.செல்வம் தலைமையில் மறே, நல்லதண்ணி சாமி...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி