பொலன்னறுவை மாவட்டம், அரலகங்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிம்பொகுண பகுதியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற குடும்பத் தகராறொன்றின் போது, கணவனால் தாக்கப்பட்ட இளம் குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பிம்பொகுண, அரலகங்வில பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு தம்பதியினருக்கு இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம், பின்னர் கொடூரத் தாக்குதலாக மாறியுள்ளது.
இதன்போது படுகாயமடைந்த பெண், ஆபத்தான நிலையில் அரலகங்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ள அரலகங்வில பொலிஸார், தலைமறைவாகியுள்ள சந்தேகநபரான பெண்ணின் கணவரைக் கைது செய்வதற்கான தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Posts
தொழிற்சங்கங்களை ஒடுக்குகின்றது அரசு.!
தொழிற்சங்கப் போராட்டங்களை முன்னிறுத்தி ஆட்சிக்கு வந்த மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தற்போதைய அரசு, தொழிற்சங்கங்களை நசுக்கி அழிக்கும் எண்ணத்துடன் செயற்பட்டு வருகின்றது என்று சுகாதாரத் தொழில்முறை...
சூழ்நிலை சீரடைந்ததும் மேலும் பல நிவாரணங்கள்.!
மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் மற்றும் வெளிப்புற பொருளாதாரச் சவால்கள் காரணமாக மக்களுக்கு எதிர்பார்த்த அளவு நிவாரணங்களை வழங்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தாலும், சூழ்நிலை சீரடைந்தவுடன்...
டெங்கு கொத்தணிகள் பதிவானால் பல்கலைக்கழகங்கள் இழுத்து மூடப்படும்.!
பல்கலைக்கழகங்களுக்குள் டெங்கு நோயாளர்கள் கொத்தணிகளாக அடையாளம் காணப்பட்டால், சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தல்களுக்கு அமைய சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி மற்றும் உயர் கல்வி...
விபத்தில் சிக்கி இளைஞன் உயிரிழப்பு.!
குருநாகல் மாவட்டம், நாரம்மல - வாரியபொல வீதியில் சியம்பலாகஸ்கொட்டுவ, மதீனா தேசிய பாடசாலைக்கு அருகில் மோட்டார் சைக்கிளும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன்...
மக்கள் கோரினால் நாமலை களமிறக்கத் தயார்.!
மக்கள் கோரிக்கை விடுத்தால், அடுத்த கட்டத் தேர்தல்களில் நாமல் ராஜபக்ஷவை வேட்பாளராகக் களமிறக்கத் தயாராகவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கண்டி, ஸ்ரீ தலதா மாளிகையில்...
மீண்டும் நீர்கொழும்பு சிறைச்சாலையில் மோதல்; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.!
நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று கைதிகளுக்கிடையில் ஏற்பட்ட மோதல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதிலும், இன்று திங்கட்கிழமை (6) மீண்டும் பதற்றநிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து, 5 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...
நல்லது நடக்கும் என நம்பி அரக்கர்களுக்கே பேராதிக்க அதிகாரத்தை வழங்கிய மக்கள்.!
"இந்த நாட்டுக்கு ஏதேனும் நல்லது நடக்கும் என்ற அதீத எதிர்பார்ப்பில், ஒட்டுமொத்தப் பொதுமக்களும் தங்களுக்குத் தாங்களே அரக்கர்களுக்கே வாக்களித்து நாட்டை ஆளும் பேராதிக்க அதிகாரத்தை வழங்கியுள்ளனர்" -...
அநுர அரசின் பழிவாங்கல் படு தீவிரம்.!
தற்போதைய 'திசைகாட்டி' அரசு சட்ட நடவடிக்கைகளைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, எதிர்க்கட்சியினருக்கு எதிரான அரசியல் பழிவாங்கல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது என்று முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான...
யானைத் தந்தம், மான் கொம்புகளுடன் சிக்கிய பெண்.!
கம்பஹா – கலகெடிஹேன பகுதியில் சட்டவிரோதமான முறையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளின் பாகங்கள் மற்றும் அரிய வகை கடல் நத்தையோடுகளுடன் 45 வயதுடைய பெண் ஒருவர்...
மோட்டார் சைக்கிள் மோதி பாதசாரி உயிரிழப்பு.!
அனுராதபுரம் மாவட்டம், கெக்கிராவ பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். கெக்கிராவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெக்கிராவ – யக்கல்ல...










